Tuesday, December 31, 2013

வருக புத்தாண்டே ! வருக !



எண்ணும் எண்ணமெலாம்
என்றும் உயர்வாகவே இருக்கட்டும் !
உள்ளத்து சிந்தையெலாம்
சிறப்பானதாகவே இருக்கட்டும் !
இதயங்கள் என்றென்றும்
இன்பத்தில் திளைக்கட்டும் !
அன்பே  எந்நாளும்
அகிலத்தை  ஆளட்டும் !
நம்மைத் தாண்டிச் செல்லும்
நல்லாண்டுக்கு மனமாற
நன்றி சொல்லி
வழியனுப்புவோம் !
நம்மைத் தேடி வரும்
புத்தாண்டை இன்முகத்துடன்
வருக வருகவென
வரவேற்போம் !

வருக புத்தாண்டே ! வருக !
நிறைத்திடுக எம் மனதை
அன்பு  அமைதி ஆனந்தத்தினால்
எந்நாளும் !


நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

Wednesday, December 25, 2013

காதல் மழை

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்  கவிதை எழுத வாருங்கள்...... என்ற பதிவில் ஓவியர் ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார். 

ஓவியமும் அதற்கான கவிதையும் இதோ:

 



கார் முகிலென நங்கையவள்  குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம்  பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில்  மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி  கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!


படைப்பாளிகளுக்கு நல்லதோர்  வாய்ப்பளித்து  ஊக்கமும் உற்சாகமும் தரும் சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கட்கு நன்றிகள் பல.

 


பூங்கொத்து வழங்கி பாராட்டியமைக்கு நன்றிகள் !!!

சகோதரரின் வலைப்பூவில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இணைப்பு 



Tuesday, December 24, 2013

தேவனே போற்றி ! போற்றி !!







அன்பின் வடிவமாய்
அகிலத்தை நனைக்க வந்த
கருணை மழையே !
மன்னிப்பின் மகத்துவத்தை
மண்ணுலகுக்கு உணர்த்திய
மாசிலா மன்னவனே !
எம் பாவங்கள் தம்மை
சிலுவையாய் தோளில்
சுமக்கும் பிதாவே !
எமக்காய் முட்கிரீடம்
தாங்கி நிற்கும்
எம் இறைவனே  !
அமைதியும் ஆனந்தமும்
அகிலமதை  நிறைத்திட
அன்பினை கற்பித்தவரே !
உங்கள் மலரடி போற்றி !
தன்னலமிலா உளமது போற்றி !
அன்பு இதயமது போற்றி !
தேவனே ! போற்றி ! போற்றி !!


Wednesday, December 18, 2013

மயிலே ! மயிலே !!



தோகை விரித்தாடும் கோல மயிலே
நீ கண்டாயோ மழை முகிலே !!!
அழகன்  முருகன்  மயிலே
காண்போரை மயக்காதோ உன் ஒயிலே !!!
தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே
உனைக் கண்டதும்  மனதில் பொங்குது மகிழ்வலையே !!!


இக்கவிதை திரு.G. M . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை எழுதலாமே பதிவிற்காக எழுதப்பட்டது.

கவிதை எழுத வாய்ப்பளித்த ஐயா அவர்கட்கு நன்றிகள் பல.

Wednesday, December 11, 2013

வருவீரோ பாரதியே ?




பாட்டுக்கோர் புலவனவன்
எம் பாக்களுக்கெலாம்
புது வடிவுடன் புத்துயிர் அளித்து
எம்மை வழிநடத்தும் 
தேவ மகன் அவர்  !!!

அடிமை விலங்கும்தான் உடைய
விடுதலை வேள்வித்தீ தனையும்
மாந்தர் உள்ளமதில் தான்
பொறி பறக்கும் பாடல்களால்
பற்றி எரியச் செய்தாரே  !!!

காக்கை குருவியுடனும்
உறவாடக் கற்பித்தார் -
பூனைக் குட்டிகளின் வாயிலாக
வேற்றுமையில் ஒற்றுமையதை
அழகாய் உணர்த்தினாரே !!!


துணிச்சல் நிறைந்த
தூயவரே ! - நீண்ட
துயில் கலைந்து வாரீரோ ? - உம்
சாட்டையடிப் பாடல்களினால்
சமூகம் சீர்திருத்த வாரீரோ ?

காத்திருக்கிறோம் உமக்காய்
கடிது வந்திடுவீர் பாவலரே
கண்ணான தேசம் காத்திட
களையெடுக்க வாரீரே -
முண்டாசுக்  கவிஞரே !!!


Wednesday, December 4, 2013

அலைபேசி !!!



கைக்கு அடக்கமாய்
அழகாய் தான் இருக்கிறது
அலைபேசி !!!
ஆயினும்
ஆயிரம் முறை
பார்க்கச் செய்து
சிதறடித்து விடுகிறது
நம் சிந்தனையை !!!

காயம் பட்ட வண்ணத்துப் பூச்சி





காலம்  அதுவும் தான் 
சாதகமாய்  அமைந்திட 
அன்பும் கனிவான   பேச்சும் 
மலர் சுமந்த  தேனாய் ஆகிட 
உந்தன் இதயமதை
மாளிகையாய் எண்ணிக் கொள்ள 
அதுவே பொறியாய் ஆகிப்  போக 
தட்டுத் தடுமாறி  தப்பித்து  வருவதற்குள் 
பேதையும் ஆகித் தான்  போகிறாளே 
காயம் பட்ட வண்ணத்துப் பூச்சியாய்  !!!
 
 

Monday, November 18, 2013

An Immune India

The greatest wealth is Health
                                     - Virgil

       As per the saying, the health plays a major role in a person's life. A sound mind and a healthy body is essential for a healthy life.Today's children are the backbone of the developing India.The future of the nation depends on today's young children. It's our duty to bring up our children as strong and healthier kids.

We should  remember and follow certain things in our mind for a stronger India.

1. Breast Feeding :

                
                    Years before the pregnancy, the cells of the body produce antibodies against the intestinal infections.These antibodies defend us against infections such as cholera and rota virus. But once, a women starts breastfeeding, these antibody producing cells move to mammary glands. So, when the baby starts having breast milk, the antibodies goes straight to the baby's intestine and helps in developing  the immune system of the new born babies.

            The breasts produce colostrum beginning during pregnancy and continuing through the early days of breastfeeding. This special milk is yellow to orange in color and thick and sticky. It is low in fat, and high in carbohydrates, protein, and antibodies to help keep the baby healthy. Colostrum is extremely easy to digest, and is therefore the perfect first food for the baby. It is low in volume, but high in concentrated nutrition for the newborn. 

2. Nutritious Foods :


                             Traditional and nutritious cereals like jowar, millets, bajra should be included in  our daily diet. These are high in nutritional value. These must be consumed a lot in the place of the junk and oily foods. The fast food culture which is a  fast approaching and a threatening demon to our healthier lives should be eradicated from our society. The intake of fresh vegetables and fruits help in leading a healthier life.

3. Exercise and Physical Work:


                          The exercise and physical work help in keeping our body fit and healthy. Now a days, the advancement in science and technology have made our lives very easier. There is a lack of physical work among the people. There should be some physical work in our daily life.
                          
                        The use of  bicycle  which burns calories instead of automobiles which consume  lot of petrol and diesel, which emits lot of carbon di oxide and carbon monoxide in the air, which is the major cause of several lung and respiratory disorders. Moreover, riding the bicycle is a great exercise to our body, which helps us to keep away from diabetes and obesity.

4. Awareness about Cleanliness:



                          The awareness about the cleanliness should be developed among people. The ill effects of littering in public places, their effects on the healthy life should be known to the people. Smoking in public places should be eradicated. Severe punishments and charges should be given to people whole exploit the environment.

5. Outdoor Playing:



                Encourage kids to play outdoors rather than sitting in front of computers and play games for all day.  Moreover, outdoor playing develops confidence in the children. It helps in developing physical abilities, which makes themselves feel positive about themselves.

These are the few simple things that can be followed in our lives to develop a more immune and healthier India.




This post is written  for  the Indiblogger contest " An Immune India" conducted by Dabur Chyawanprash .

Thursday, November 14, 2013

குழந்தைகள் தினம்




புன்னகையில் - ஆதவனின்
ஒளியைச் சுமந்து
குதூகலத்தில் - துள்ளியோடும்
மானின் துறுதுறுப்போடு
எடுத்த காரியமதை முடித்திட
ஓயாத விடாமுயற்சியோடு
எதையும்  அறிந்து  கொண்டு
விடத் துடிக்கும் ஆர்வத்தோடு
கொஞ்சிப் பேசும் மொழியெலாம்
தத்தை  பேச்சினும்  இனிமையோடு
கள்ளமென்பதை  எள்ளளவும் அறியா
கிள்ளை உள்ளங்களோடு -
நாளும்  வாழ்ந்திடுவோம் 
இளமை மாறா இதயத்துடன் !!!


 நண்பர்கள் அனைவருக்கும் இனிய      குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் !!!

Sunday, November 10, 2013

இரத்தினக் கம்பளம்






உன் பிஞ்சுப் பாதம் 
மண்ணில் பதிய 
பூமித் தாயும் அகமகிழ்ந்து 
உளம் பூரித்து - ஆனந்தம் வழிய 
புன்னகையுடன்  உனக்கு 
இரத்தினக் கம்பளம் விரித்து 
வரவேற்பளிக்கிறாளோ ??
கள்ளமறியா கிள்ளையே !!!
அவளை  எந்நாளும் காத்திட 
உறுதிகொண்டால் - எந்நாளும் 
நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!
நல்வாழ்வு வாழ மண் - மழை காக்க
மனதில்  உறுதி கொள்வோமே !!!
இரத்தினக் கம்பளத்தின் எழிலினை 
இரசித்து மகிழ்வோமே !!!

நன்றி, வல்லமை மின்னிதழ் 

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துகள் !






இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,
ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,
ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Tuesday, October 15, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தென்றல் சசிகலா அவர்கள்

இந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி  சசிகலா அவர்கள்  அனுபவமும் பழமொழியும் !  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 





எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  தென்றல் சசிகலா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

Monday, October 14, 2013

ஓர் இளந்தென்றலின் ஏக்கம் !!



நளினமாய் வளைந்தாடி
தென்றலுடன் கவிபாடி
மெல்லிசை கீதங்களை
செவிகளுக்கு விருந்தாக்கி
காணும் கண்களுக்கு
எழில் காட்சியாகி
மனம் மையல் கொள்ளச் செய்த
இரத்தினக் கம்பளம் போர்த்திய
பெண்ணணங்கே !
நீ எங்கே ?


பாவனைகள்  பல காட்டி
நீ  நடனமாடிய
நில  மேடையில் - இன்று
கல்லும்  மண்ணும்
கட்டிடமாய் உயர்ந்து நிற்க
ஒவ்வோர் நாளும்
உன்னைத் தேடி ஓடிவரும்
தென்றலதுவும் - பலத்த
ஏமாற்றத்துடனே ஏங்கிப் போய்
திரும்பிச் செல்கிறது !


தென்றலும் தான்
ஏற்க மறுக்கின்றது !
உடன் விளையாட
நீ இல்லை என்ற உண்மையை !
அதனுடன் கைகோர்த்து
களிநடம் புரியவேனும்
மீண்டு வந்திட மாட்டாயோ
இரத்தினப் பட்டுடுத்தி
மலரும் மணியும் ஆபரணமாய் சூடும்
எழிலார்ந்த நிலமகளே !!!

நஞ்சான உயிர்வளி !




தண்மையைச்   சுமந்து   வரும்
மெல்ல  நம்   மனம்  தழுவும்
புத்துணர்வு  தனை  நம்முள் பரப்பி
புது  உற்சாகம்  நமை  ஆட்கொளச்  செயும்
இன்பமான  உயிர்வளி !!!
வாழ்வின் ஆதாரமாயும்
அவசியத் தேவையுமான  உயிர்வளி !
இன்றோ நஞ்சாய் ! –  ஏன் ? எதனால் ?
புகை ! புகை ! எங்கும்  புகை ! எதிலும்  புகை !
வாகனப் புகை ! தொழிற்சாலைப் புகை !
சிகரெட் புகை ! எரிக்கும்  குப்பையினால் புகை !
காற்று மண்டலமே  புகை மண்டலமாகிவிட
எங்கு தேடுவது தூய்மையான  உயிர்வளியை ?
காற்றைத் தூய்மைப் படுத்தி
நமக்கு உயிர்வளி வழங்கும் உத்தமர் அவர்தம்
உறவினை வெறுத்தோம் – சுயநலப்
பேயும் தான் மனதினை ஆட்கொள்ள
உலக உயிர்க்கெலாம்  அன்னையென
அடைக்கலமளித்து காக்கும்
மரங்களையும் வெட்டிக் குவித்தோம் !
நினைவில் இருத்திக்  கொள்வோம் –
இயற்கையை மதியாது  உதறிவிட்டு
செயற்கைக்கு வரவேற்பளிக்கிறோம் ! 
நமக்கு நாமே - நம்மை அறியாது
சூன்யம் வைத்துக் கொள்கிறோம் !
நாம் உயிர்  வாழ உயிர்வாயுதனை
கலன்களில் அடைத்து
முதுகினில் சுமந்து  திரியும்
காலமதுவும் வெகுதொலைவிலில்லை !!!
மரங்களைக் காத்து தூய்மையான  உயிர்வளிக்கு
வழிவகை செய்தால் – வாழலாம் நலமுடன் !!
இல்லையேல் – அருகிவரும் இனமதில்
மானுடம் சேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை !!!

Monday, September 23, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!! - தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி


ஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்
உள்ளத்து அறியாமை இருளகற்றி
அன்பெனும்  அருள் விளக்கினை
இதயங்களில் ஏற்றிடுவோம் !!!

உள்ளமதில் தோன்றும்
வெறுப்பு பகை மறந்து
கலகப்பாய்  சரவெடியென
பேசிச் சிரித்து மகிழ்ந்திடுவோம் !!!

பண்டிகை பதார்த்தத்துடன்
பாசத்தினையும் பகிர்ந்திடுவோம்
பலமான அன்புறவு தனை
பாங்குடனே வளர்த்திடுவோம் !!!

சிதறும் மத்தாப்புகளென
சிரிப்பினை  உதிர்த்திடுவோம்
சிந்தனைகளை உயர்வாய் கொண்டு
சித்தமாக்கிடுவோம் காரியங்களை !!!

கவலைகளை புஸ்வானமாய்
தெரித்தோடச்  செய்து விட்டு
அழகான புன்னகையால்
தீபங்கள் ஏற்றுவோம் !!!

நெஞ்சில் இரக்கம்  மிக கொண்டு
உதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்
ஆதரவுக்கரம் நீட்டுவோம் ! - அவர்தம் மகிழ்ச்சி
புன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள
 நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!!


நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2/

Wednesday, September 11, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி திரு.விமலன் அவர்கள்

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்

இந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா  திரு.விமலன் அவர்கள்  ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 




முகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,
 எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 

ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!
                                                                                                                                                          மனம் கொள்ளை  கொள்கிற இக்கவிதை  ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய்.
  


எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த  திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

Thursday, September 5, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்

இந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர்  சே.குமார் அவர்கள்  மனசு பேசுகிறது – ஆசிரியர்கள்  என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 
 

"...உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!.."

எழுத்தாளரின் பெயர்
தமிழ்முகில் பிரகாசம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.

 ****

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

ஆசிரியர்








எண்ணும்   எழுத்தும்
கண்ணெனக்  கொண்டார்

ஏடும்  எழுதுகோலுமே
உறுதுணையாய் கொண்டார்

கடமையும் ஒழுக்கமும் என்றும்
உயர்வினைத் தருமென உணர்த்தினார்

வணங்குதலும் வாழ்த்துதலும்
கற்றுத் தந்தவர் அவரே

நன்றியுணர்வதையும் நம்
மனத்தில் விதைப்பவரும் அவரே

விட்டுக்   கொடுத்தலையும் மன்னிக்கும்
 குணமதையும் கற்பித்தவர் ஆசானே

ஊக்கமதை   அள்ளித்   தந்து - நம்முள்ளிருக்கும்
ஆக்கம்  பல  வெளிக்கொணர்ந்தவர்

வாழ்வின்  உயரத்தில்  நம்மை  ஏற்றி  வைத்துவிட்டு - நாம்
கற்ற கல்விக்கு  நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்

நினைவில்  கொள்வோம் -  நம்மை  உருவாக்கிய  பேராசான்களை
போற்றுவோம் - அவர்தம்  உழைப்பையும்  தியாகத்தையும் !!!


 இனிய   ஆசிரியர் தின   நல்வாழ்த்துகள் !!!

Tuesday, September 3, 2013

செல்லப் பிராணியின் அன்பு



எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 
ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!


Saturday, August 31, 2013

சுதந்திர இந்தியா









இலஞ்சத்தின் பிடியில்
அரசியல்வாதிகளின் -
இரும்புக் கரங்களுள்
சுதந்திர இந்தியா !
பாதுகாப்பும் தான் பறிபோய்
பல நாட்களும் ஆனதே !
அத்தியாவசியத் தேவைகளெல்லாம்
ஆகாச உயரத்திற்கு விலையேறிப் போனதே !
சுயநலமும் தான் அனைவர்
மனங்களையும் ஆட்கொண்டதே -
தேசத்தின் நினைப்பும் தான்
இல்லாமலேயே போனதே !
செல்வரெல்லாம் மென்மேலும்
கொழித்துக் கொண்டே போக
ஏழை எளியோரோ - நாளும்
துயரில் உழன்று கொண்டேயிருக்க
அடிப்படைக் கல்வி கூட நாளை
கனவான் வீட்டுக் கஜானாவினுள்
சிறையிருந்தாலும் - சற்றும்
ஆச்சயப்படுவதற்கில்லை!
கடமை உணர்ந்து தேசம் காத்திட்டால்
தேசம் நம் சொத்து ! - இல்லையேல்
தயாராய் இருக்க வேண்டும் -
இன்னுமோர் சுதந்திர வேள்விக்கு !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=87

Wednesday, August 28, 2013

கண்ணன் வந்தான் !!!






கண்ணன் வந்தான்
எங்கள் கண்ணன் வந்தான் !
களிப்பினை ஏந்தி
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்ணீர் துடைக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
காத்திருந்த  எம்மை களிப்பிலாழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்களால் சிரித்து கவலைகள் மறக்கடிக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
கட்டிக் கரும்பென சுட்டிக் குறும்போடு 
எங்கள் கண்ணன் வந்தான் !
காலமெலாம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !

Sunday, August 25, 2013

தனிமை - இனிமை



ஆயிரமாயிரம் எண்ணங்கள்
எத்துனையோ  நினைவுகள்
அணி கட்டிக் கொண்டு
மனதினுள் நீயா நானா என்று
முண்டியடித்து வர முயன்றதில்
ஏகப்பட்ட தள்ளு முள்ளு !!
இவையனைத்தையும் சீர்படுத்தி
செம்மையாய் பிரித்தறிந்து
தீர்வறிவதற்குள் பாவம்
துவண்டுதான் போய்விட்டது  மூளை !
அதுவும் தான் தேடி அலைந்தது -
ஓய்வும் உறக்கமும் !
துன்பம் துயரமனைத்தையும்
தனிமைப் படுத்திவிட்டு
அமைதியின் கரங்களில்
நம்மை ஒப்புவித்தால்
தனிமையும் கூட இனிமையே !!!



Friday, August 23, 2013

தனிமை



 




யாரையோ எதிர்பார்த்து நானும் 
எனக்காக காத்துக் கிடக்கும் 
எவரோ ஒருவருக்கும்
துணையாகக் கிடைத்தது 
தனிமை மட்டுமே !!!
சில வேளைகளில் 
கனவுகள் கற்பனைகள் மட்டுமே 
உற்ற துணையாய் !!!

Tuesday, August 20, 2013

எங்கேயோ கேட்ட குரல் !!!



வளைந்து நெளிந்தாடி
பாடி வரும் தென்றல் வழி
ஓடி வரும் இசையென
தெவிட்டா அமுதூற்றென
தேமதுரக் குரல் !!

தனிமையையும் உணரவில்லை
தவிப்பதுவும் தோன்றவில்லை
நினைத்த நொடிதனில்
இசை வெள்ளமென
செவிதனில் பாயும் குரல் !!

உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!

கற்பனையாய் ஆனாலும்
கனவதனில் தொலைத்தாலும்
கடல் தாண்டி மலை தாண்டி நின்றாலும்
நினைவுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
எங்கேயோ கேட்ட குரலாய் !!

Tuesday, July 30, 2013

தென்றல்....



உயரமாய் வளர்ந்து
நிமிர்ந்து  நிற்கும்   மூங்கிலதில்
வளைந்து  நெளிந்தாடி
வருடும் தென்றல் - ஒலிக்கும்
சிந்தைகவர் வேணுகானமாய் !!!


வளைந்து  நிமிர்ந்த   நாணல்
வண்ண  முத்திரைகள்  காட்டி
வதனமதில் புன்னகை பூட்டி
கானமிசைக்கும்  தென்றலுக்கு ஏற்ப
ஆடும் எழில் நர்த்தனமாய் !!!


புத்தம் புதிதாய்  அலர்ந்து
எழில்  வண்ணம்  சூடி
சிந்தை தனைக்  கவர்ந்து
புன்னகை  உதிர்க்கும்  மலர்தனில்
தென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் !!!


சிந்திய  சருகுகள் தனை
சற்றே  தொட்டுச் சென்று
சிரித்தோடி விளையாடும்
சின்னஞ்சிறு  தென்றல் -
சலசலக்கும் சலங்கை ஒலியாய் !!!


நாசிதனில்  நுழையும் தென்றலது
தால்  மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்
உளம்தனை  உருக்கி
உயிர்தனை  வருடும்
இனிய மெல்லிசையாய் !!!


மேகக் காதலனோடு கிசுகிசுக்கும்
மரமாகிய பெண்ணவளுக்கு
காதல் நாயகனின் பரிசாம்
மழை முத்தங்களை  தென்றலது
பத்திரமாய் முத்திரையெனச்  சேர்க்கும் !!!


Wednesday, July 17, 2013

சகோதர மனம் !



கரம் பற்றி
கதைகள் பல  பேசியும்
சண்டையும் சச்சரவும்
வந்த நொடியில் மறைந்து
மறந்தும் போய் விட
கண்மணி தங்கை அவளின்
கண்களும் அகல  விரிய
ஆசையுடன் பார்க்கும்
சிறுகிள்ளை அவளுக்கு
அன்பையெல்லாம் வாரிச் சேர்த்து
சிறு முத்தமொன்றை
பரிசாய்த் தந்து
ஆவலுடன்  ஓடி வரும்
உடன்பிறப்பின் கை பற்றி
ஆர்வத்துடன் கற்றுத் தந்து
கள்ளமில்லா புன்னகை அதுவும்
பரிசாய்க் கிடைத்திட 
அவள்தம் மகிழ்ச்சியும் வெற்றியுமே
பெரிதாய்த் தோன்றிட
வாழ்வில் வளமனைத்தும்
அவளது காலடியில் சேர்ந்திட
வேண்டிடும் - சகோதர மனம் !
 



Related Posts Plugin for WordPress, Blogger...