Monday, April 18, 2011

வாழ்க்கை

அன்பை கூட்டி....அகம்பாவம் கழித்து
அறிவை பெருக்கி... அறநெறி வகுத்து
ஆண்டவனிடம் ஆக்கம் கற்று
ஆனந்தம் உலகெல்லாம் பரப்பி
இன்பம் கொடுத்து
இல்லாமை நீக்கி ..... இயல்பாய் வாழ்ந்து
ஈகை கடைப்பிடித்து
உள்ளங்கள் உணர்ந்து
உலகை ஒன்றாக்கி
ஊருடன் ஒன்று கூடி
எல்லோரும் ஓரினமென
ஏற்றம் பெற்றிட
ஐயமின்றி போரிடுவோம்
ஒன்றே குலமேன்றக்கிடுவோம்
ஓராயிரம் தடையாயினும் தகர்த்திடுவோம்..
ஔவியம் பேசாது வாழ்ந்திடுவோம்
இறைவன் நமக்களித்த வாழ்க்கையினை!!!
http://www.eegarai.net/t48826-topic 

Friday, April 15, 2011

வானம்


அடர்ந்த ஆகாயக் 
கானகத்தில் இப்போது
இலையுதிர் காலமா??
நட்சத்திர இலைச்சருகுகள்
உதிர்ந்து கிடக்கின்றனவே....

நம்பிக்கை


பரந்து விரிந்த வானம்
என்றென்றும்
திறந்து இருக்கும் என்ற
நம்பிக்கையில்
பறவைகளின் வாழ்க்கை
சிறகடித்துக் கொண்டிருக்கிறது...

தான் வேரூன்றி நிற்கும்
பூமித்தாய் தன்னை
தாங்குவாள் என்ற
நம்பிக்கையில்
தாவரங்களும் மரங்களும்
தலையசைத்து நிற்கின்றன...

சுற்றும் பூமிப்பந்து 
என்றென்றும் சுழன்று
கொண்டே இருக்கும் என்ற
நம்பிக்கையில் கலக்கமின்றி
இரவு பகலென உழலும்
இவ் வையம்....

நம்பிக்கை- அது
வாழ்வின் ஆதாரம்....
இறைவன் உலகுக்கு
அளித்த காணிக்கை....
எதிர் கொள்வோம்
வாழ்வை- புதிய
நம்பிக்கையோடு.....
http://eluthu.com/kavithai/46183.html 

மௌன மரங்கள்!!!


வெயிலுக்கு ஒதுங்க 
நிழல் தேடி....
என் மடியில் வந்து 
தஞ்சமடைகிறாய்.....
என்னிடமிருந்து நீ 
எதை எடுக்கவில்லை??
நான் தான் உனக்கு எதை 
கொடுக்க மறுத்தேன்???
அன்னமிட்ட வீட்டில் 
கன்னமிடுவது போல் 
என்னையே வெட்டுகிறாயே???
கண்ணீருடன் 
எதிர்க்க திராணி இன்றி 
ஓங்கி நிற்கும் மரங்கள்!!!
http://eluthu.com/kavithai/36945.html 

வரம் தராத வசந்தங்கள்.....

அன்றொரு நாள்....
கல்லூரி மைதானத்தில்
என் சகமாணவியாய்
கைகோர்த்து நடக்கத் துவங்கினாய்....
உன் மழலை குணத்தினாலும் 
கள்ளமில்லா மனத்தினாலும்
என்னை கொள்ளையடித்தாய் ......
என் தோழியே....அன்று மலர்ந்ததடி வசந்தம்....
நாம் ஆடினோம்....பாடினோம்....
கவலையின்றி மகிழ்ந்திருந்தோம்.....
குறுகிய காலமாயினும்-என்றென்றும்
மனதில் நிழலாடும் வசந்த காலம்!!!
அந்த மரத்தடி கல்மேடையும்...
உன் கொஞ்சு மலையாள பேச்சும்
என்றும் என் மனதில் ரீங்கரிக்கும்....
ஆனால்...... நட்பு வரத்தை நாம் 
அறியாத நொடியில்   தந்த காலம்
பிரிவு வரத்தை  ஒவ்வொரு நொடியும்
நாம் அறியும் வகையில் தந்துவிட்டது....
உன் நட்பினை எனக்கு வரமென
அள்ளித்தந்த வசந்தங்கள் -இன்றோ
உன்னைப் பற்றி அறிய முடியாதபடி
வரம் தராத வசந்தங்களாய்.......
http://www.eegarai.net/t47385p45-2

பெண்ணுக்குள் பூகம்பம்


சலனமில்லாமல்  மென்மையாய்
பொறுமையின் இருப்பிடமாய்
அமைதியாக நகரும் நதியென
வாழும் பெண் பொறுமையிழந்து
கொந்தளிக்கிறாள் ......எப்போது??
அன்பே ஆயுதமாய்
கனிவே படைகலன் என
வாழும் அவளிடம்
அநீதி எனும் விஷக் கணைகள்
தொடுக்கப்படும்போது......
வெற்றிச்சிகரத்தை எட்ட
விடா முயற்சியுடன்
தன் சுகம் மறந்து
மாடாய் உழைத்து
உருக்குலைந்து போய்
வெற்றிக்கனி  கைகளுக்கு வரும் நொடியில்
தட்டிப்பறித்து  உதாசீனப் படுத்தப்படும்போது........
பொறுமையே கைக்கொண்டு
எக்காளமிடும் ஆரவாரத்தை    
கருத்தில் கொள்ளதபோதும்
அது எல்லை மீறும்
அந்த ஒரு நொடி.....
பெண் பூகம்பமாகிறாள்......
http://eluthu.com/kavithai/46185.html 

புத்தாண்டே.....புது வரவே....


கடந்த கால அனுபவங்களை ஆசானாக்கி
நிகழ் காலத்தில் -மனதில் துணிவை
உறுதுணையாய்க் கொண்டு
தன்னம்பிக்கை மிகக்கொண்டு
வெற்றிச் சிகரங்களை எட்ட
வரவேற்போம்......புத்தாண்டை!!!

போர் மறந்து ...ஆயுதம் மறந்து ...
அன்பினை கைக்கொண்டு
 
மனித நேயம் மனதிற் கொண்டு
ஏற்றத் தாழ்வுகள் மறைந்து
உலக ஒற்றுமை என்றும் ஓங்க
வரவேற்போம்..... புத்தாண்டை!!!

இல்லாமை இருளகற்ற ..
ஈகை விளக்கேற்றி
உயர்வு தாழ்வு மறந்து
உதவி புரியும் மனங்கொண்டு
இதயத்தில் அன்பு  மிகக்கொண்டு
வரவேற்போம்......புத்தாண்டை!!!

கல்லாமை அழித்தொழித்து
அறிவு ஒளியேற்ற
கற்று அறிந்தோரெல்லாம்...
கற்றறிந்ததன் பயன்-
"
உலகிற்கு எழுத்தறிவித்தல்" என்று சபதமேற்று
வரவேற்போம்......புத்தாண்டை!!! 

புதுவரவாய் இருக்கும்
புத்தாண்டு பல நன்மைகள் தர ...
உள்ளத்து எண்ணங்களை
நிறைவற்ற .....வரவேற்போம்....
புத்தாண்டே.....புது வரவே....
வருக !!! வருக !!!
அனைவரது வாழ்விலும்
 
வசந்தங்கள் பல தருக!!!
http://www.eegarai.net/t49287p15-3

Related Posts Plugin for WordPress, Blogger...