Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

Friday, July 10, 2015

வலைச்சரம் கவிதைகள்

வலைச்சர ஆசிரியராக கடந்த 2014 ஆம் ஆண்டு  மே மாதம் ஐந்தாம் தேதி முதல் பதினோறாம் தேதி வரை பொறுப்பேற்று இருந்த காலத்தில் ஒவ்வொரு பதிவிற்கும் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தோட்டம் 

மண்ணை  முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே 
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி ! 

புதிர்

மூளை தன்னை
முடங்க  விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !

கைவினை 

மனதிற்கு  மகிழ்வளிக்கும் 
நல்லதோர் வினை !
ஓய்வு  நேரமதில் 
செய்து பார்ப்போமே 
உற்சாகம் ஊட்டும் 
கைவினை !

கோலம் 

எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !
  

குழந்தை / மழலை 

கொஞ்சும்  மழலையர் தம் 
சொல்லும் செயலுமே
கொண்டு  வருமே 
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !

Friday, March 14, 2014

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள்

இந்த வாரம் கிராமத்துக் கருவாச்சி தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் பளப்பளன்னு சொலிக்கனுமா ??   என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 


 

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  கலை  அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

 

 

Tuesday, October 15, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தென்றல் சசிகலா அவர்கள்

இந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி  சசிகலா அவர்கள்  அனுபவமும் பழமொழியும் !  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 





எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  தென்றல் சசிகலா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

Wednesday, September 11, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி திரு.விமலன் அவர்கள்

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்

இந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா  திரு.விமலன் அவர்கள்  ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 




முகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,
 எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 

ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!
                                                                                                                                                          மனம் கொள்ளை  கொள்கிற இக்கவிதை  ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய்.
  


எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த  திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

Thursday, September 5, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்

இந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர்  சே.குமார் அவர்கள்  மனசு பேசுகிறது – ஆசிரியர்கள்  என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 
 

"...உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!.."

எழுத்தாளரின் பெயர்
தமிழ்முகில் பிரகாசம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.

 ****

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

Sunday, June 30, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - இரவின் புன்னகை திரு.வெற்றிவேல் அவர்கள்

 










இந்த வாரம் இரவின் புன்னகை தளத்தில் எழுதி வரும் சகோதரர்  வெற்றிவேல்  அவர்கள்  கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம் என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
  அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.




து லைப்பூவை லைச்த்தில் அறிமுகப்டுத்திகோரர்  திரு.வெற்றிவேல் வர்கட்கு என் நன்றிகள் ல.
ங்னம், திருதி.பி.மிழ் முகில் நீமேகம்





Thursday, April 4, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தேமதுரத் தமிழ் கிரேஸ் பிரதிபா அவர்கள்


வலைச்சரம் எனும் தளத்தில் வாரம் ஓர் பதிவர் தான் பார்த்த படித்த ரசித்த வலைப்பூக்கள் குறித்து எழுதி வருகிறார். இந்த வாரம் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்கள் முல்லை திணைக்குப் பொருத்தமான  கவிதைகள்  சிலவற்றை  பல்வேறு வலைப்பூக்களில் இருந்து எடுத்து தொகுத்து வழங்கியுள்ளார்.அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.



து லைப்பூவை லைச்த்தில் அறிமுகப்டுத்திகோரி கிரேஸ் பிதிபா அவர்கட்கு என் நன்றிகள் ல.

ங்னம்,
திருதி.பி.மிழ் முகில் நீமேகம் 


Friday, March 22, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சகோதரி அருணா செல்வம்


வலைச்சரம் எனும் தளத்தில் வாரம் ஓர் பதிவர் தான் பார்த்த படித்த ரசித்த வலைப்பூக்கள் குறித்து எழுதி வருகிறார். இந்த வாரம் சகோதரி அருணா செல்வம் அவர்கள் தாயகம் கடந்தும் தமிழ் காப்போர்!!
எனும் தலைப்பில் வெளிநாட்டு வாழ் தமிழர் சிலரின் தமிழ் வலைப்பூக்கள் குறித்து எழுதியுள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.

 என்னை தமிழ் வலையுலகுக்கு அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றிகள் பல.
Related Posts Plugin for WordPress, Blogger...