Monday, September 23, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!! - தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி


ஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்
உள்ளத்து அறியாமை இருளகற்றி
அன்பெனும்  அருள் விளக்கினை
இதயங்களில் ஏற்றிடுவோம் !!!

உள்ளமதில் தோன்றும்
வெறுப்பு பகை மறந்து
கலகப்பாய்  சரவெடியென
பேசிச் சிரித்து மகிழ்ந்திடுவோம் !!!

பண்டிகை பதார்த்தத்துடன்
பாசத்தினையும் பகிர்ந்திடுவோம்
பலமான அன்புறவு தனை
பாங்குடனே வளர்த்திடுவோம் !!!

சிதறும் மத்தாப்புகளென
சிரிப்பினை  உதிர்த்திடுவோம்
சிந்தனைகளை உயர்வாய் கொண்டு
சித்தமாக்கிடுவோம் காரியங்களை !!!

கவலைகளை புஸ்வானமாய்
தெரித்தோடச்  செய்து விட்டு
அழகான புன்னகையால்
தீபங்கள் ஏற்றுவோம் !!!

நெஞ்சில் இரக்கம்  மிக கொண்டு
உதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்
ஆதரவுக்கரம் நீட்டுவோம் ! - அவர்தம் மகிழ்ச்சி
புன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள
 நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!!


நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2/

Wednesday, September 11, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி திரு.விமலன் அவர்கள்

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்

இந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா  திரு.விமலன் அவர்கள்  ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 




முகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,
 எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 

ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!
                                                                                                                                                          மனம் கொள்ளை  கொள்கிற இக்கவிதை  ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய்.
  


எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த  திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

Thursday, September 5, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்

இந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர்  சே.குமார் அவர்கள்  மனசு பேசுகிறது – ஆசிரியர்கள்  என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 
 

"...உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!.."

எழுத்தாளரின் பெயர்
தமிழ்முகில் பிரகாசம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.

 ****

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

ஆசிரியர்








எண்ணும்   எழுத்தும்
கண்ணெனக்  கொண்டார்

ஏடும்  எழுதுகோலுமே
உறுதுணையாய் கொண்டார்

கடமையும் ஒழுக்கமும் என்றும்
உயர்வினைத் தருமென உணர்த்தினார்

வணங்குதலும் வாழ்த்துதலும்
கற்றுத் தந்தவர் அவரே

நன்றியுணர்வதையும் நம்
மனத்தில் விதைப்பவரும் அவரே

விட்டுக்   கொடுத்தலையும் மன்னிக்கும்
 குணமதையும் கற்பித்தவர் ஆசானே

ஊக்கமதை   அள்ளித்   தந்து - நம்முள்ளிருக்கும்
ஆக்கம்  பல  வெளிக்கொணர்ந்தவர்

வாழ்வின்  உயரத்தில்  நம்மை  ஏற்றி  வைத்துவிட்டு - நாம்
கற்ற கல்விக்கு  நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்

நினைவில்  கொள்வோம் -  நம்மை  உருவாக்கிய  பேராசான்களை
போற்றுவோம் - அவர்தம்  உழைப்பையும்  தியாகத்தையும் !!!


 இனிய   ஆசிரியர் தின   நல்வாழ்த்துகள் !!!

Tuesday, September 3, 2013

செல்லப் பிராணியின் அன்பு



எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 
ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!


Related Posts Plugin for WordPress, Blogger...