Thursday, March 31, 2011

சமாதானம்

அன்பிலும் அதனால் 
பிறந்த உறவிலும் 
விளையும் மாறுபாடுகள் -
உள்ளங்களின் வேறுபாட்டினால்!!!
உடைந்த உள்ளங்களை 
ஒன்று சேர்க்கும் -மனம் திறந்து
பேசும் வார்த்தைகள்!!
உயிர்களை ஒன்றாக்கி 
உலகை வளமாக்கும்-
சாமாதானம்!!!

Monday, March 28, 2011

மின்னல்

வான ஊரில் இன்று
மின் வெட்டு போலும்....
சந்திர விளக்கு எரியவில்லையே??
நட்சத்திர மின்மினி விளக்குகள் கூட
ஏனோ எரியவில்லை..
மின்னல் மட்டும்
அவ்வப்போது
பேரொளி பாய்ச்சி
இருளை தற்காலிகமாய்
விரட்டுகிறது!!!

link 

மின்னல்

மேகப் பெண்ணிற்கு
இன்றென்ன கோபமோ??
தன் ஒளிவீசும்
ஆபரணங்களை கழற்றி
எறிகிறாள் போலும்.....
அது மின்னலாய்
நம் கண்களை பறிக்கிறது!!!

link 

கடல்

தவழ்ந்தோடி வந்து
பாதம் தழுவும் வேளையில்
சிறு கிள்ளை என
கொஞ்சி விளையாடுகிறாய்!!!
உள்ளம் கொள்ளை கொள்கிறாய் !!!
நீயே சீறி எழுந்து
எங்களை கொன்று குவிப்பதும்
ஏன் தாயே? எங்கள் மீது -
தங்களுக்கு என்ன வெறுப்போ??

அமைதி

உள்ளத்து சப்தங்களின்று
விடுபட்டு - மென்மையாய்
சலனமற்று நிற்கும் நிலை - அமைதி!!!
மனதை மெல்லிறகாய் வருடும் இசை!!!
உள்ளத்து எண்ணங்களின் பிரதிபலிப்பாய் கவிதை!!!
ஊகத்தினால் ஆக்கம் பல தரும் நம்பிக்கை !!!
நிலையில்லாது அலைக்கழியும் மனதின் தெளிவு!!!
ஆத்திரம் மறைந்து ஊற்றெடுக்கும் அன்பு!!!
இவற்றின் ஜனனம் என்றென்றும்
ஆரவாரம் மறைந்து
அமைதி நிலவும் நேரத்தில்!!!

மழை !!!

மேகத் தாய் பிரசவித்த
குழந்தை- மழை!!!
வானின்று கீழிறங்கி
பூமி மகளின் மடிதனில்
தவழ்ந்திட்ட மழை மழலை...
வாரி அணைத்திட்டாள்
பூமாதேவி தன் கிள்ளை என!!
தன்னுள் நிறைத்திட்டாள்
உள்ளம் மகிழ்ந்தாள்
உற்சாகம் பீறிட்டது-
மண் வாசனை மணம் பரப்பியது!
புல்வெளியும் சிலிர்த்தது-
தன் மீது துளிர்த்தது அமிர்தமென...
காக்கையும் குருவியும் சிறகடித்து
தலைநிமிர்ந்து கம்பீரமாய்
உற்சாக வரவேற்பு அளித்தன ....
எங்கோ இருந்து தவளை கூட்டமும்
மழைக் கச்சேரி பாட வந்து விட்டன...
மனிதர்களே....
நீங்களும் வாருங்கள்...
மழைக் கிள்ளையின்
அழகை ரசிக்க!!!
அந்த மகிழ்ச்சியில்
உலகை மறக்க!!!
http://eluthu.com/kavithai/36946.html
http://www.eegarai.net/t48741-topic 

மேகங்கள்

வான வீதியில்
அழகு ஊர்வலங்கள்
எண்ணங்களின் பிரதிபலிப்பாய்
கண்ணில் படும் மாயங்கள் ........
காற்றின் திசையில் தவழும்
வெண்புகை பந்து ஒன்று
நம்முடன் நகர்வதாய் ஒரு மாயை ...
பஞ்சுப் பொதியொன்று
நிலா மகளுடன் கண்ணாமூச்சி
ஆடுவதாய் ஒரு எண்ணம்....
வெட்கத்தை ஆடையென அணிந்த
மங்கையைப் போல்
சூரியப் பந்தினை
தன்னுள் மறைத்துக் கொண்டு
உலகத்தின் கண்களை
கட்டி விட்டதைப் போல்
குறும்புச் சிரிப்பு சிரித்து
மென்மையாய் மனதை தழுவிச் செல்லும்
மேகக் கூட்டங்கள்!!!
http://eluthu.com/kavithai/36947.html
http://www.eegarai.net/t49242-topic 

இலையுதிர் காலம்

மண்ணில் கால் பதித்து
வானளாவ உயர்ந்து நிற்கும்
மரத்திற்கு சுமை பாரம்
தாங்கவில்லை போலும்...
இலைகளை உதிர்த்து
கனிகளை விடுத்து
சுமைகளை இறக்கி
விட்டதாய்
பெரு மூச்செறிந்து நிற்கிறதோ ??

வானவில்யார் வரைந்து முடித்து
கழுவி உதறிய
வண்ணத் தூரிகை
இத்தனை அழகாய்
தெளித்திருக்கிறது?
பொறுமையாய் வரைய
நேரமில்லை போலும்...
அவசரமாய் கிழித்த கோடு கூட
அம்சமாய் அமைந்தது எப்படி?
நினைத்த நேரத்தில் காண முடியா
அசத்தும் ஆச்சர்யம்...
கண நேரம் கண்ணில் பட்டு
மறையும் ஒளி ஓவியம்....
வில்லென வளைந்து
வண்ண அம்புகளால்
மனதை கொள்ளையடிக்கும்
இயற்கையின் அதிசயம்-
வானவில்!!!
http://eluthu.com/kavithai/47399.html 

ஒரு மரத்தின் கோரிக்கை...


உயரமாய் வளர்ந்து
தென்றலின் இசைக்கேற்ப
தலையசைத்து ......
கிளைகளை கைகளென விரித்து
உங்களை நோக்கி
நீட்டிக் கொண்டிருக்கிறேன்....
உங்களிடம் உதவி வேண்டி அல்ல...
உங்களை என் அன்புக் கரங்களால்
அரவணைத்துக் கொள்ள!!
மரமென்ற போதும்
ஜடமில்லை நான்
என்னுள்ளும் உயிர் உண்டு...
உள்ளன்போடு அரவணைக்கிறேன்
உங்களை என் பிள்ளைகள் என...
நன்றி சிறிதளவேனும் இருக்கட்டும்
உங்கள் உள்ளத்தில்!!!
நான் இன்றி நீங்கள் இல்லை என்பது
பதியட்டும் என்றும் மனதில்...
எங்களை வாழ விடுங்கள்-
எங்களால் நீங்களும் வாழுங்கள்!!!
http://eluthu.com/kavithai/36948.html

பனி

வெள்ளைக் கம்பளம் ஒன்று
பூமித் தாயின் மடிதனில்
விரிந்து கிடக்கிறது.....
ஓங்கி உயர்ந்து நிற்கும்
மரங்களும் - தேவதைகள் போல்
வெள்ளை அங்கி அணிந்து நிற்கின்றன.....
சூரியனின் ஒளிப் பிம்பங்கள்
பட்டது தான் தாமதம்
புன்னகை கீற்று போல
மெல்லென மின்னி
உருகி மௌனமாய்
கரைந்தோடின -
பனித் துகள்கள்.....
http://eluthu.com/kavithai/36950.html 

கரை சேரா ஓடங்கள்.....

வாழ்க்கை ஆற்றைக் கடக்க
கல்வி எனும் துடுப்பெடுத்து
அனுபவக் கரை தேடி ...
நானும் பயணித்தேன் ஓடமாய்...
என் மன ஓடத்தில் தான்-
எத்தனை எத்தனை கனவுகள்
எண்ணிலடங்கா ஆசைகள்...
அத்தனையும் நொடிப் பொழுதில்
நொறுங்கிச் சிதறின ....
வறுமை எனும் பாறை மோதி
நான் குழந்தை தொழில் எனும்
கடலில் மூழ்கிய போது.....
இன்னும் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...
கரை சேரா ஓடமாய்.....
எந்தப் புயலடித்து எங்கு ஒதுங்குவேனோ??
யாரறிவார்??
http://eluthu.com/kavithai/46173.html 

செவ்வானம்

சுட்டெரிக்கும் சூரியனின்
அக்னி ஜுவாலைகளை
தான் விழுங்கி நீரருந்தியது போல்
கடல் தோழியுடன்
கை கோர்த்துக் கொண்டு
நிலாப் பெண்ணைப் பார்த்து
புன்னகை புரிகிறாள்
வான மகள்.....
Related Posts Plugin for WordPress, Blogger...