Monday, January 13, 2014

பொங்குக பொங்கல் ! அன்பையும் அமைதியையும் அகிலமெலாம் பரப்பிட !!!



புது பானையில்
புது அரிசி -பனை
வெல்லம் கொண்டு
பொங்கலிட்டு -
மங்கள மஞ்சளும்
தித்திக்கும் செங்கரும்பும்
வாழ்வாதார ஆதவனுக்கு
படையலிட்டு -
ஏர் கலப்பையுடன்
கால்நடைகளையும்
நினைவில் கொண்டு
வாழ்த்தி வணங்கி
உதிரமதை வியர்வையாக்கி
விதைக்கு வியர்வையையே நீராக்கி
உலகுக்கே உணவு உடை வழங்கும்
உன்னத ஆத்மாக்களாம்
உழவர்களை எந்நாளும்
நினைவில் கொள்வோம் !
மனித வாழ்வுக்கு
விவசாயமே ஆதாரமென்பதை
நினைவில் நிறுத்தி
இயற்கையை காப்போம் !
இயற்கையின் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்வோம் !


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!



24 comments :

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. இயற்கையை காப்போம் !
    இயற்கையின் அரவணைப்பில்
    இன்பமாய் வாழ்வோம் !

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
    மலரட்டும் ......

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  4. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சார்/

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  5. அருமையான கவிதை தோழி!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  6. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete

  7. வணக்கம்!

    திருவள்ளுவா் ஆண்டு 2045
    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழாய்ச் சமைத்து!

    பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
    கங்குல் நிலையைக் கழித்து!

    பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
    எங்கும் பொதுமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
    தொங்கும் உலகைத் துடைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  8. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் மங்களம் பொங்கிட என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .

      Delete
  9. இன்றுதான் தங்கள் வலைப்பதிவைக் கண்டேன்! கவிதை நன்று! வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்துக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  10. அருமையான பொங்கல் கவிதை !வாழ்த்துக்கள் தோழி !!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  11. சிறப்பான பொங்கல் வாழ்த்துகள்....

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

      Delete
  12. பிந்திய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  13. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலை மிகவும் அருமையாக இருக்கு ..வார்த்தைகள் செந்தமிழில் படிக்க சுவையாக இருக்கு ...வாழ்த்துக்கள் ..
      http://snowwhitesona.blogspot.com/2013/12/sponge-flowers-on-paper-plate.html

      Delete
    2. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் தோழி. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...