Friday, August 29, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

படத்திற்கான கவிதை 

 


நிலைக்  கதவுல தலைசாய்ச்சு
நெலையில்லாம தவிக்கும் மனசுல
நெனப்பெல்லாம் மாமன் மேலிருக்க
மணம்  நெறஞ்சு கிடக்குற
மூங்கில் பூக்கூடையைப் போல
மனசெல்லாம் மாமன் மணம்  வீச
பூச்சரத்தை சூடிடத் தான் - மாமன்
புதங்கிழமையில பொன்னோட வந்திடுவானோ -
பூவரசியே !  எந்நாளும் நீயே எந்தன்
வாழ்வரசியே ! என்று சொல்லி
பூரித்து நிற்கத் தான் செய்ய
புது மாப்பிள்ளையாய் மாமன் அவனும்
வாசல் வந்து சேர்ந்திடுவானோ ?
 மாமனைக் கண்ட மாத்திரத்தில்
வெட்கம் மட்டுமே துணையாகிப்போக
மெல்ல கண் விரித்து தான்
மாமனை நேரா பார்த்திடுவேனோ - இல்லை
முகம் மூடி விரலிடுக்குல பார்த்திடுவேனோ !
கண்ணிரண்டுல கனவு கோடி மின்ன
உதட்டோரத்துல புன்னகை கீற்றாய் மின்ன
உனக்காகவே காத்துக் கிடக்கும் என்னை
உடனே வந்து சேர்ந்திடு - போகும் உசிரை
உன் கூடவே கூட்டிப் போயிடு - உன்
நெஞ்சுக் கூட்டுல பொக்கிஷமா சேத்துடு
என் மாமனே !


 விருப்பத் தலைப்பு 

மலர்களே ! மலர்களே !


மலர்களே ! மலர்களே !
மண்ணின் புன்னகை  சுமக்கும்
அழகு இதழ்களே !
வண்ணங்கள் பல சூடி
எண்ணங்கள் களவாடும்
மாயமந்திரம் கற்றுத் தந்த
மந்திரவாதி அவர் யாரோ ?
அவர்தம் ஊர்  ஏதோ ?

மணம் சுமக்கும் மாதரே
மனம் கவர்ந்து கொண்டீரே !
மண்ணில் வாழ்நாள் குறைந்தாலும்
வாழ்வாங்கு வாழும் சிறப்பு
நீரே தான் பெற்றீரே !
அதற்கான மார்க்கம் தனையே
அவசியமாய் உரைப்பீரே -
உணர்ந்தால் உயருமே  எம் வாழ்வே !

கண்ணுக்கு விருந்தானீர் !
கருத்துக்கு கருவானீர் !
காசினிக்கு கவினானீர் !
களிப்பிற்கு காரணமானீர் !
காலமெலாம் உங்கள் எழிலில்
கவலை மறந்து யாம் வாழ
கட்டுக்கடங்கா ஆசை அலைமோதுதே !
உமை போல் வாழ திண்ணம் மேலோங்குதே !

16 comments :

 1. இரண்டு கவிதைகளுமே அருமை கவிஞரே!
  போட்டியில் வாகை சூட வாழ்த்துகிறேன்.
  நன்றி!

  ReplyDelete
 2. இரண்டு கவிதைகளும் கண்டு ரசித்தேன் வெற்றி பெற என் இனிய
  நல் வாழ்த்துக்கள் சகோதரா !

  ReplyDelete
 3. சிறப்பான சிந்தனை! அழகான வர்ணனை!
  இரண்டு கவிதைகளும் மிகச் சிறப்பு!

  வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 4. வணக்கம்
  தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. @ ஊமைக் கனவுகள்

  மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 6. @ அம்பாளடியாள்

  தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோ.

  ReplyDelete
 7. @ இளமதி

  தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
 8. @ ரூபன்

  அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

  தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. கண்ணுக்கு விருந்தானீர் !
  கருத்துக்கு கருவானீர் !
  காசினிக்கு கவினானீர் !
  களிப்பிற்கு காரணமானீர் !
  அருமையான சிந்தனை ஓவியத்திற்கு பொருத்தமான அழகான கவிதைகள்.
  வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 10. கவிதைகள் அருமை! வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 11. @ Iniya

  தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

  ReplyDelete
 12. @ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

  மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 13. இரு கவிதைகளும் அற்புதம்!
  நடுவர்கள் திண்டாடப் போகிறார்கள்..
  வெற்றி கிட்டட்டும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் ஆசிகட்கும் மனமார்ந்த நன்றிகள் கவியே...

  ReplyDelete
 15. இரண்டு கவிதைகளும் அருமை! பரிசு பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...