Monday, September 28, 2015

தொழில்நுட்பம் பண்பாட்டை அழித்தல் சரியா ?



கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமைகளாய்
உலவித் திரியும் மனிதர்களே !
சற்றே நின்றிடுவீர் !

காதடைத்த ஒலிவாங்கி
கவனம் சிதைக்கும் இசை
கால் துடித்தாடும் ஆட்டம் என
உங்களையே மறக்கடிக்கும்
அலைபேசிக்கும் சற்றே ஓய்வளிப்பீர் !

புன்னகை இழையோட முகம் நோக்கும் குழந்தை
அரக்கப் பறக்க ஓடும் மாணாக்கர் என
சுற்றி நிகழும் நிகழ்வுதனை உணர
உம்மைச் சுற்றியே கண்களை
ஓர் முறை சுழல விடுங்கள் !

சுற்றி இருக்கும் உலகை விட்டு
தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு
சிரித்து பேசி அழுது ஆர்ப்பரிக்க
சுற்றத்திற்கோ - ஏதும் புரியாது
 மனதுள் சிரித்து செல்கிறார் !

உலகை மறந்து உறவை மறந்து

சிந்தையை சிறை பிடித்து - அறிவிற்கு
அடிபணிய வேண்டிய தொழில்நுட்பம்
 நம்மையே அடிமைப் படுத்தி
உயர் பண்பாடு அழிக்க வழிகோலுதல் சரியா?



குறிப்பு:

இப்பதிவில் உள்ள புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி.



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்




9 comments :

  1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. வணக்கம் சகோ! கவிதை அருமை! ஆண்ராய்டுகளால் அழிந்துவருகிறோம்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  4. அருமையான கவி ஆக்கம், வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்ற.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  5. நல்ல கவிதை.

    படம் செம!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...