கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
இதயத்திற்கும் பூட்டிட்டு
சாவியைத் தொலைத்து விட்டவராய்
ஊரெங்கும் தேடி அலைகிறார்
மாந்தர் - மனித நேயம் தனை !
கண்களில் கருணையும்
வார்த்தைகளில் கனிவும்
இதழ்களில் புன்னகையும்
துடிக்கும் இதயம் தனில்
தன்னலம் மறந்த கருணையும்
தனக்கென வருகையில்
கையேந்தலை விடுத்து
இயன்ற தருணமெலாம்
கைகொடுத்து வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் அகிலமெலாம்
மனித நேயம் !
தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
http://www.dinamani.com/kavithaimani/
//தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.
//இயன்ற தருணமெலாம் கைகொடுத்து வாழ்ந்தால் நிலைத்திருக்கும் அகிலமெலாம் மனித நேயம் !//
அருமையோ அருமை.:)
நன்றிகள் பல ஐயா.
Delete//இயன்ற தருணமெல்லாம்
ReplyDeleteகைகொடுத்து வாழ்ந்தால்// மிக அருமை தோழி
வாழ்த்துகள்
நன்றிகள் தோழி.
Deleteஅருமை. தினமணியில் வெளியானதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....
ReplyDeleteநன்றிகள் பல சகோதரரே !
Deleteஅருமை! சகோ! தினமணியில் வெளியானதற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
ReplyDelete/இயன்ற தருணமெலாம் கைகொடுத்து வாழ்ந்தால் நிலைத்திருக்கும் அகிலமெலாம் மனித நேயம் !// ஆம்!