சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கவிதை எழுத வாருங்கள்...... என்ற பதிவில் ஓவியர் ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார்.
ஓவியமும் அதற்கான கவிதையும் இதோ:
கார் முகிலென நங்கையவள் குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம் பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில் மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!
படைப்பாளிகளுக்கு நல்லதோர் வாய்ப்பளித்து ஊக்கமும் உற்சாகமும் தரும் சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கட்கு நன்றிகள் பல.
பூங்கொத்து வழங்கி பாராட்டியமைக்கு நன்றிகள் !!!
சகோதரரின் வலைப்பூவில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இணைப்பு
உங்கள் கவிதை இன்று எனது வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன்.....
ReplyDeleteதங்கள் தகவலுக்கு....
http://venkatnagaraj.blogspot.com/2013/12/4.html
கவிதையை வெளியிட்டு, நல்லதோர் வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் சகோதரரே !!!
Deleteஅருமையான ஓவியத்திற்கு இணையான
ReplyDeleteஅற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
Deleteதமிழ் மண வாக்கிற்கு நன்றி ஐயா...
ReplyDeleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Deleteமிகவும் அருமையான கவிதை!
ReplyDeleteநல்ல கற்பனை!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.2
காதல் மழையில் நனையும் கவிதையில்
ReplyDeleteகூதல் வருதே குளிர்ந்து!
அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!
Deletetamilmanam 3
ReplyDeleteதமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா...
Deletekavithai very nice ma
ReplyDeleteThank you so much sister...
Delete