கனவினிலும் கற்பனையிலும்
உன் முகம் கண்டு
ஆயிரமாயிரம் கதைகள் பேசி
கொஞ்சி விளையாடி
புன்னகைத்து - பூரித்து
உன் வரவிற்காய்
தவமாய் தவமிருந்து
கருவினில் மெல்ல
துள்ளியும் - செல்லமாய்
பிஞ்சுக் கால்களால் உதைத்தும்
உன் ஒவ்வோர் சிறு
அசைவிலும் அதிர்விலும்
இனிய நினைவுகளை ஏற்படுத்தி
உன் ஜனன மணித்துளிகள்
ஒவ்வொன்றும் - மரணத்திலும்
மறவா உயிர்த்துளிகளாகிட
உன் விரல்கள் தீண்டிய
மென்மையான ஸ்பரிசத்தால்
மகிழ்ச்சி வெள்ளமதில்
இதயம் தத்தளிக்க - அதுவே
ஆனந்தமாய் கண்ணீரென
வெளிப்பட - வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
தொண்டைக் குழியின்
அடியாழத்தில் இருந்து
துள்ளி ஓடி வரத் துடிக்க
ஏதோ ஒரு விசை
அவற்றை மீண்டும்
உள்ளே தள்ளி அழுத்த
உன் இதழ் உதிர்த்த
சிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !
என் உயிர் தனில் நிறைந்திட்ட
உன் முதல் ஸ்பரிசத்தால் !!!!
என்னவொரு இனிமையான உணர்வு வரிகளில்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteமிக மிக அருமை தோழி...தாய்மைக்கே உரிய அருமையான உணர்வு!
ReplyDeleteவாழ்த்துகள்!
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteவாழ்த்துக்கள் முகில் ! தாய்மை கவிதையில் பளிச்சிடுகிறதே!
ReplyDeleteதாய்மை - மிக அழகான உணர்வு... அதை வார்த்தைகளில் கொணர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுகள்.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே.
Delete//உன் இதழ் உதிர்த்த
ReplyDeleteசிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !//
அருமை. இனிமை. அழகு. உணர்வுபூர்வமான மிகச்சிறந்த படைப்பு.
தலைப்பும் படத்தேர்வும் வெகு அருமை.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.
Deleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
அருமை தோழி
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Deleteஎனது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் தோழி.
ReplyDelete