பட்டுப் பாதம் அது
சுடும் நெருப்புல தான்
பொத்துப் போயிடுமோ
இல்ல -
கொத்து நெருஞ்சியும் தான்
பஞ்சு பாதத்தையே
பதம் பாத்துருமோ
இல்ல -
நடந்து நடந்து உன்
குட்டிக் காலுந்தான்
நோவெடுத்துப் போகுமோ
இதையெல்லாம் நினைச்சாலே
மனசு பதைக்குது - என்
தங்கச்சி தங்கமே !
நானே உன்ன சுமக்கறேன்
என் முதுகுல உப்பு மூட்டையா !
சுமக்கிறதெல்லாம் சுமை
ஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு
அண்ணன் உன்னை
விரசா கூட்டிப் போறேன்
என் குட்டித் தங்கமே !!!
ஆனந்த சுமை ஆயுளும் நீடிக்கட்டும்
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் ஐயா....
Deleteஅழகான அருமையான... பொறுப்பான வரிகளை ரசித்தேன்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇது என்றும் தொடரவும் வேண்டும்...
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் ஐயா...
Deleteஅருமையான அண்ணன்....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஆனந்தக் கண்ணீர் வந்தது...அருமை தோழி!
ReplyDeleteத.ம.3
நன்றி தோழி.
Deleteபாசமலர் சிவாஜியும் சாவித்ரியும் இந்த அழகான கவிதையில் குழந்தைகளாக ... ;)
ReplyDeleteஆஹா !! மிக்க நன்றி ஐயா.
Deleteபாசம் ததும்பும் கவிதை..... படத்திற்கு மிகப் பொருத்தமாய்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே !!!
Delete''...சுமக்கிறதெல்லாம் சுமை
ReplyDeleteஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு...'''
பாசம்...பாசம்!
நேசம்...நேசம்!
இனிமை...இனிமை....!!!!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
ReplyDeleteகனமற்ற குட்டித்தங்கம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
Deleteபாடல் தாலாட்டு போலவே உள்ளது...
ReplyDeleteஅழகு...
மிக்க நன்றி சகோதரரே !!!
Delete