அந்தப் பச்சரிசிப்
பல் சிரிப்பும்
குழி விழுந்த
சின்னக் கண்ணும்
என் கண்ணை விட்டு
அகலாது - என்
கண்ணான கண்ணவளே !
நெருப்பது சுட்டெரிச்சாலும்
என்னைய வெட்டி எறிஞ்சாலும்
நெஞ்சுல பூவா நிறைஞ்சிருக்க
உன் நெனைப்பும் தான்
அது என்னென்னைக்கும்
என்னை விட்டுப் போகாது - என்
பொன்னான சின்னவளே !
கஞ்சிக் கலையத்தை தான்
நீ சுமந்து வாரையில
மனசுந் தான் துள்ளிக் குதிக்கும் !
பூத்து நிக்கற வேர்வைப் பூவுந்தான்
உன் முந்தானை பட்டதும்
வெக்கப்பட்டு ஓடிப் போகும் - என்
செல்லம்மா பொண்ணவளே!
பழைய கஞ்சியும்
நேத்து வச்ச மீன் குழம்பும் தான்
அமுதமாகிப் போகுமே
உன் பட்டுக் கை பட்டாலே !
உழைச்சு ஓஞ்ச உடம்பும் தான்
உற்சாகமாகுமே - உன் அன்பாலே
என் கட்டித் தங்கமானவளே !
காலமெலாம் உனக்கு நானும்
எனக்கு நீயுந்தான் -
காலமது மாறினாலும்
கோலமது மாறினாலும்
என்றும் இளமை மாறாது
நாம கொண்ட அன்பு தான்
என் வாழ்வானவளே !
ஆகா... அருமை...
ReplyDeleteஅன்பு தினம் என்றும் வேண்டும்...
தினம் என்றும் அன்பாக வேண்டும்...
வாழ்த்துக்கள்...
அன்பு தினம் என்றும் வேண்டும்...
Deleteதினம் என்றும் அன்பாக வேண்டும்...
அழகான வரிகள்.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
காலம் மாறினாலும் கோலம் மாறினாலும் மாறாத அன்பை அழகாய்ச் சொன்னீர்கள்
ReplyDeleteதங்களது ஊக்கமூட்டும் கருத்துரைக்கு நன்றிகள் பல தோழி.
Delete//என்றும் இளமை மாறாது
ReplyDeleteநாம கொண்ட அன்பு தான்
என் வாழ்வானவளே !// அருமையான கவிதை தோழி! எப்பொழுதும் மாறாக் காதல் உயர்வானது..வாழ்த்துகள்!
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅருமையான கவிதை..... பாராட்டுகள்.
ReplyDeleteதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் சகோதரரே...
Deleteஇனிய கவிதை ,,பாராட்டுக்கள்..!
ReplyDeleteதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteமண் வாசனை மாறாத இன்பக் காதல் கவிதைக்குப் பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் சகோதரா.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Delete