கருவேல முள்ளுந்தான்
காடெல்லாம் மண்டிக் கிடக்கு
காத்தும் கூட இதனால
கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு !
பொன்னா விளையுற மண்ணும்
புண்ணாகித் தான் போச்சு !
நிலத்தடி நீரும் மாயமாக
நிலமும் பாளமா வெடிச்சு போச்சு !
வஞ்சமிலாம குடுத்த பூமியும்
நஞ்சுபோய் தான் கிடக்குது
நஞ்சை புஞ்சையாய் விளைஞ்ச பூமி
பஞ்சத்துக்கு தான் பலியா போச்சு !
மாடு கண்ணு காடு கழனியில
புல்லு தின்ன காலம் மாறி
நெகிழி பையை தின்னுற
நிலைமை தான் ஆச்சுது !
கட்டவுத்து விட்டுட்டு
காடெல்லாம் மேஞ்சிட்டு
கருத்தா வீடு வந்துடுன்னு
தட்டிக் குடுத்தனுப்ப ஆசைதான் !
தனியாவே நீயும் போய்
தின்னக் கூடாததை எல்லாம்
தீனியாகக் கொள்ளாமல் காக்க
தடியெடுத்து துணையாக வருகிறேன் நானுமே !
http://www.vallamai.com/?p=55908#comment-12367
படத்தேர்வும், வேதனையூட்டும் இன்றைய நிகழ்வினை எடுத்துச்சொல்லும் பாடல் வரிகளும் அருமையோ அருமை.
ReplyDeleteவல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமை தோழி, வாழ்த்துகள்!
ReplyDeleteபடமும் படத்திற்கான கவிதையும் நன்று.
ReplyDeleteவேதனையான விஷயம்....... என்று மாறுவோம்...