குறும்புத்தனம் மின்னும் கண்களில்
எண்ணிலடங்கா தேடல்கள் !
சிவந்திருக்கும் உதட்டோரம்
எட்டிப்பார்க்கும் நாவும்
அழகாய் சொல்லுதே
உந்தன் சுட்டித்தனங்களை!
பரட்டையாய் காற்றில் அலைபாயும்
உந்தன் கேசமும் அழுக்கேறிய ஆடையும்
அப்பட்டமாய் சொல்கிறதே உந்தன் வறுமையை !
வறுமையை உடைத்தெறிய
கோடாரியும் மண்வெட்டியும்
கையிலெடுத்தாயோ ?
கல்விக்கண் திறந்த காமராசர்
மீண்டும் பிறந்து வந்தாலன்றி
கல்வி என்பது பணம் படைத்தோரின்
சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
உனை ஆட்கொண்டு விட்டதோ - கல்வி
எட்டாக்கனியாகிடுமோ என கவலைப்படுகிறாயோ ?
எத்தனையோ இலவசங்கள்
வரிசை கட்டி வந்தாலும் - உழைத்தாலன்றி
அடுத்த வேளை உணவென்பது
கேள்விக்குறியான போது -நானும்
இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்
பிழை என்ன இருக்கிறதென்று கேட்கிறாயோ ?
http://www.vallamai.com/?p=56610
ஆக்கத்தின் ஆழமான மனம் கனக்கும் வரிகளால், இன்றைய சமூக அவலங்களை சாட்டையால் அடித்துள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteநம் பிழைதான் ,,,,
ReplyDeleteஅருமை. வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல தோழி.
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி சகோதரரே...
Delete