Wednesday, April 22, 2015

குழந்தை தொழிலாளி


குறும்புத்தனம் மின்னும் கண்களில்

எண்ணிலடங்கா தேடல்கள் !
சிவந்திருக்கும் உதட்டோரம்
எட்டிப்பார்க்கும்  நாவும்
அழகாய் சொல்லுதே
உந்தன் சுட்டித்தனங்களை!


பரட்டையாய் காற்றில் அலைபாயும்
உந்தன் கேசமும் அழுக்கேறிய ஆடையும்
அப்பட்டமாய் சொல்கிறதே உந்தன் வறுமையை !
வறுமையை உடைத்தெறிய
கோடாரியும் மண்வெட்டியும்
கையிலெடுத்தாயோ  ?

கல்விக்கண் திறந்த காமராசர்
மீண்டும் பிறந்து வந்தாலன்றி
கல்வி என்பது பணம் படைத்தோரின்
சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
உனை ஆட்கொண்டு விட்டதோ - கல்வி
எட்டாக்கனியாகிடுமோ என கவலைப்படுகிறாயோ ?

எத்தனையோ இலவசங்கள்
வரிசை கட்டி வந்தாலும் - உழைத்தாலன்றி
அடுத்த வேளை உணவென்பது
கேள்விக்குறியான போது -நானும்
 இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்
பிழை என்ன இருக்கிறதென்று  கேட்கிறாயோ ?

http://www.vallamai.com/?p=56610


6 comments :

  1. ஆக்கத்தின் ஆழமான மனம் கனக்கும் வரிகளால், இன்றைய சமூக அவலங்களை சாட்டையால் அடித்துள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. நம் பிழைதான் ,,,,
    அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான கவிதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...