Thursday, July 11, 2019

இனிமேல் மழைக்காலம்





துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !


நன்றி, தினமணி - கவிதைமணி

2 comments :

  1. இதோ இங்கு மழை பெய்கிறது! மழையை ரசித்தக் காலம் போய், இவ்வளவு.நீரும் சேமிக்கபப்டுகிறதா என்றே தோன்றுகிறது...நீரின்றி அமையாது உலக. சிந்திக்கவைக்கும் கவிதை நன்று தோழி

    ReplyDelete
    Replies
    1. மழையை இரசித்து பழகிய நாம், இனி அதை சேமிக்கவும் பழகித் தான் ஆக வேண்டும்.இது காலத்தின் கட்டாயம். இந்நிலைக்கு நாமே பொறுப்பு. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...