Thursday, August 1, 2019

கருப்பு



வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
 
 
இவ்வார  தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

2 comments :

  1. தங்களது வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை. தினமணியில் வெளியீடு - வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...