எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொண்டார்
ஏடும் எழுதுகோலுமே
உறுதுணையாய் கொண்டார்
கடமையும் ஒழுக்கமும் என்றும்
உயர்வினைத் தருமென உணர்த்தினார்
வணங்குதலும் வாழ்த்துதலும்
கற்றுத் தந்தவர் அவரே
நன்றியுணர்வதையும் நம்
மனத்தில் விதைப்பவரும் அவரே
விட்டுக் கொடுத்தலையும் மன்னிக்கும்
குணமதையும் கற்பித்தவர் ஆசானே
ஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்
ஆக்கம் பல வெளிக்கொணர்ந்தவர்
வாழ்வின் உயரத்தில் நம்மை ஏற்றி வைத்துவிட்டு - நாம்
கற்ற கல்விக்கு நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்
நினைவில் கொள்வோம் - நம்மை உருவாக்கிய பேராசான்களை
போற்றுவோம் - அவர்தம் உழைப்பையும் தியாகத்தையும் !!!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் !!!
akka nalla irukku
ReplyDeleteThank you thambu...
Deleteவணக்கம் தோழமையே...
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html
நன்றி.
நட்புடன்
மனசு சே.குமார்
வலைச்சரத்தில் எனது பதிவுகளை குறிப்பிட்டு எனக்கு மென்மேலும் உற்சாகமளிக்கும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!
Delete// விட்டுக் கொடுத்தலையும் மன்னிக்கும்
ReplyDeleteகுணமதையும் கற்பித்தவர் ஆசானே... //
சிறப்பு... வாழ்த்துக்கள்...
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteநல்ல நினைவேற்றல்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஆசிரியர் தின வாழ்த்துக்கள். வரிகள் சிறப்பு.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
DeleteNalla vatikal.
ReplyDeleteVetha.Elangathilakam.
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் கவியே !!!
Delete