எந்தன் உள்ளங்கைகளில் அப்படியே
முகம் புதைத்துக் கொண்டு
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம்
வாலசைத்துக் கொண்டே
காவலாய் உடன் வருவாய் !!
கண்டதும் சந்தோஷம் மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன்
கட்டுக்கடங்கா கள்ளமில்லா
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால்
என்றென்றும் - உந்தன்
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு
ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!
கைமாறு இல்லாமல் இருந்தால் தான் அன்பு... மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கு நன்றிகள்.
Deleteகைம்மாறு எதிர்பாராத அன்பு செல்லப் பிராணிகளிடம் தான் கிடைக்கும்.
ReplyDeleteஅருமையான கவிதை.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteலைற்ரா யாருக்கோ சூடு போட்ட மாதிரி இருக்கே :))))))))
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ .செல்லப் பிராணிகள் உண்மையிலும்
மனிதர்களை விடச் சிறந்தவையே அன்பு காட்டுவதில் .
சிறப்பான சிந்தனை .பாராட்டுகள் .
யாருக்கும் சூடெல்லாம் இல்லை சகோதரி. நாய்க்குட்டியைப் பற்றி எழுதியதே.
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான பாராட்டுதல்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
நானும்வீட்டில் வளர்க்கிறேன்
ReplyDeleteநல்ல நண்பர்கள் அவர்கள். தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஆஹா! அருமை. மெத்தென்று ஒரு கவிதை. :-) என் வீட்டில் இருப்பவருக்கு வால் மட்டும் ஆடாது. ஆனால் பொல்லாத வால். ;))
ReplyDeleteதங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் தோழி.
Deleteஇவர்கள் செய்யும் குறும்புகள் சொல்லி மாளாது. இவர்கள் காட்டும் அன்பைக் கண்டால், செய்த குறும்புகளெல்லாம் நொடியினில் மறந்தே போய்விடும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.