சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 28ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.
ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
ஒரு காலம் !
உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !
வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏறு தழுவியது
ஒரு காலம் !
சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !
மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய் இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -
மனித இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !
http://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_31.html
வாய்ப்பளித்த நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.
ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
ஒரு காலம் !
உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !
வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏறு தழுவியது
ஒரு காலம் !
சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !
மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய் இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -
மனித இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !
http://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_31.html
வாய்ப்பளித்த நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
கவிதை எழுதி அனுப்பியதற்கும், அதை எனது பக்கத்தில் வெளியிட அனுமதித்தற்கும் நன்றி.
ReplyDeleteசிறப்பான கவிதை. பாராட்டுகள்.
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
Deleteஉண்மைதான்.மாட்டுவண்டியின் பயன்பாடு குறைந்துவிட்டது
ReplyDeleteஇயற்கையை விட்டு விலகி வெகு தூரம் வந்து விட்டோம். தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Delete