தகதகவென ஜொலிக்கும்
தங்கக் கிரீடம் சுமந்து
சூரியப் பெண்ணவள்
வான் சோலையில் உலவ
எதிர்பட்ட மேகக் காதலனை
கண்டதும் மெல்ல
நாணமதுவும் ஆட்கொண்டு விட
தன் சூரியக் காதலியை
மேகக் காதலன்
ஆரத் தழுவிக் கொள்ள – அவளோ
வெட்கத்துடன் சிறு கீற்றாய்
புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு
மெல்ல தன் முகம் மூடிக் கொள்ள
ஆங்கே அரங்கேறுகிறது
அந்திப் பொழுதிலோர்
நிலை மாறாக் காதல் !
நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=46591
அருமையான காட்சியை
ReplyDeleteஅற்புதமான கவிதையாக்கியது அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deletetha.ma 2
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
Deleteசூரியனையும் மேகத்தையும் ஒன்று சேர்த்து அருமையான ஒரு காதல் கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteஅழகிய காட்சியினை அற்புத வரிகளில் கொடுத்துள்ளது அருமை. வல்லமையில் வெளிவந்துள்ளதற்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறுகதை விமர்சனப்போட்டிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteவிமர்சனப் போட்டியில் நிச்சயம் கலந்து கொள்கிறேன் ஐயா.
அருமை... அருமை...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅருமை
ReplyDeleteதம 4
மிக்க நன்றி ஐயா.
Deleteதமிழ் மண வாக்கிற்கும் நன்றி ஐயா.
நீலவான ஆடைக்குள் முகம் மறைத்தே,
ReplyDeleteநிலாவென்று காட்டினை நின்ஒளிமுகத்தை,
கோலமுழுதுங் காட்டி நின்றால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?
என நிலவைப் பெண்ணாக்கிக் காட்டுவான பாரதிதாசன்.நிலவைப் பெண்ணாக்கி ச் சூரியனை ஆணாக்கிக் கவிபடைத்தோர் பலர்.
நான் படித்தவரை சூரியனைப் பெண்ணாக்கிக் கவிதை இல்லை.
ஒருபுறம் ஆச்சரியம், மறுபுறம் மகிழ்ச்சி.....!
நல்ல கவிதை சகோதரி.
இன்னும் எழுதுங்கள். நன்றி.
தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.
Deleteதங்களது அன்பான, ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அழகான காட்சியை கண்முன்னே நிறுத்திய கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Delete