இலஞ்சத்தின் பிடியில்
அரசியல்வாதிகளின் -
இரும்புக் கரங்களுள்
சுதந்திர இந்தியா !
பாதுகாப்பும் தான் பறிபோய்
பல நாட்களும் ஆனதே !
அத்தியாவசியத் தேவைகளெல்லாம்
ஆகாச உயரத்திற்கு விலையேறிப் போனதே !
சுயநலமும் தான் அனைவர்
மனங்களையும் ஆட்கொண்டதே -
தேசத்தின் நினைப்பும் தான்
இல்லாமலேயே போனதே !
செல்வரெல்லாம் மென்மேலும்
கொழித்துக் கொண்டே போக
ஏழை எளியோரோ - நாளும்
துயரில் உழன்று கொண்டேயிருக்க
அடிப்படைக் கல்வி கூட நாளை
கனவான் வீட்டுக் கஜானாவினுள்
சிறையிருந்தாலும் - சற்றும்
ஆச்சயப்படுவதற்கில்லை!
கடமை உணர்ந்து தேசம் காத்திட்டால்
தேசம் நம் சொத்து ! - இல்லையேல்
தயாராய் இருக்க வேண்டும் -
இன்னுமோர் சுதந்திர வேள்விக்கு !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=87
ஒவ்வொரு மனிதரும் உணர்ந்தால்தான் தேசம் காக்க முடியும்.. கவிதை நன்று!
ReplyDeleteதங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா ....
Deleteஉங்கள் எண்ணங்களை அருமையை கவிதையாய் வடித்துவிட்டீர்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் உக்கமூட்டும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி ....
Delete