Thursday, July 3, 2014

பாழ் உள்ளம்



பத்து திங்கள் மடிசுமந்து
பத்திரமாய் பொக்கிஷமென
பெற்றெடுத்து - உதிரம் தனையே
உணவாக்கி - பொன்னெழிலே !
நீயே ஆனாய் எந்தன் உலகமே என
உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ ?
அவளும் ஓர் பெண்ணன்றோ ?
அன்னையவள் மீது பிறக்கும்
அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால்
ஏற்படாததும் தான் ஏனோ ?


பெண்ணென்பவள் போகப்
பொருளாகிப் போனாளோ ?
காணும் பெண்ணுருவெல்லாம்
மயக்கமடையச் செய்யுதோ ?
உந்தன்  மயக்கத்திற்கு
விதிவிலக்கென்பது இல்லையோ?


பச்சிளம் கிள்ளை தொடங்கி
பழுத்த மூதாட்டி வரை
பெண்ணுரு கொண்ட
அனைவர் மீதும் உந்தன்
ஆசை அலைபாயுமெனில்
குறை உந்தன் உள்ளம் தனிலே
உள்ளம் தோன்றும் எண்ணம் தனிலே !


உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்கா காளையென
தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை
உணருங்கள் !


பெண்ணெனப் பிறப்பெடுத்தவள்
இரத்தம் தோலினாலான
சதைப் பிண்டமல்ல !
உயிரும் உணர்வும்
உன்னதமும் உறுதியும்
மிகக் கொண்டவள் !


சிரிக்கும் சிலையென எண்ணி
சீண்டிப் பார்க்க முனையாதீர்
சீறிப் பாய்ந்து வந்தால்
சின்னாபின்னமாய் சிதைந்திடுவீர் !


சட்டம் கொண்டே உங்கள் புழு  நெளியும்
சாக்கடை எண்ணங்களை
சுத்திகரிக்க முடியுமெனில்
நீங்களும் இருப்பீர்கள்
நாளை - இராட்சதக் கூண்டுகளில்
காட்சிப் பொருளாய் !


உங்களையும் ஆள நாளை
இறைவன் படைத்திடுவான்
ஏழறிவு ஜீவராசிகளை !


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/பாழ்-உள்ளம் 

11 comments :

  1. இப்பாதககர்களை கழுவில் ஏற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. //உள்ளம் தனை ஆள
    எண்ணம் சிறிதும் இலாது
    கட்டுக்கடங்கா காளையென
    தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
    வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
    மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
    மாக்களிலும் சேர்த்தி இல்லை
    உணருங்கள் !// சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  3. அந்த சட்டம் மிகவும் கடுமையான சட்டமாக இருக்க வேண்டும். அப்பொழுது அந்த தவறை புரிய அஞ்சுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. ஆனால், அது நடக்கும் நாள் தான் எந்நாளோ ?

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. கடுமையான சட்டமும் அதை செயல்படுத்தும் திறன் கொண்டவர்களும் இப்போதைய அவசரத் தேவை.....

    வரும்வரை இவர்களை சாட்டையால் அடித்தாலும் தகும்.....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. ஆனால், சட்டம் பணம் படைத்தவர்களிடம் அடைபட்டுக் கிடக்கும் வரை இது நடக்குமோ ?

      Delete
  5. இது ஒரு சாராருக்கு மட்டுமே நடப்பது மிகவும் வேதனைக்குரியதாய்/

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. //நீங்கள்
    மாக்களிலும் சேர்த்தி இல்லை// உண்மைதான் தோழி!
    //சட்டம் கொண்டே உங்கள் புழு நெளியும்
    சாக்கடை எண்ணங்களை
    சுத்திகரிக்க முடியுமெனில்
    நீங்களும் இருப்பீர்கள்
    நாளை - இராட்சதக் கூண்டுகளில்
    காட்சிப் பொருளாய் !// கடுந்தண்டனை தரும் சட்டம் விரைவில் வேண்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...