சிந்தையை சிறைப்படுத்தி
தன்னிலை மறக்கடித்து
மதிப்பையும் தானழித்து
எண்ணம் - வண்ணம் எல்லாம்
குழம்பிப் போய் - பேசும்
வார்த்தைகளும் நிலை தடுமாற
நடையிலும் தள்ளாட்டம் சேர்ந்திட
சுற்றம் சூழ்நிலை மறந்த நிலையில்
ஊர் உலகுக்கு காட்சிப் பொருளாக்கி
தன்மானத்திற்கும் மரியாதைக்கும்
தானே இட்டுக் கொண்ட கொள்ளியாய்
சுட்டெரித்து சூன்யமாக்கிடும் - மது !
தினமணி கவிதைமணி பகுதியில் அக்டோபர் 19ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
http://www.dinamani.com/kavithaimani
அருமை... உண்மை...
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteசூன்யமாக்கிடும் - மது !////எல்லாவற்றையும்......அருமை
ReplyDeleteநன்றிகள் சகோ.
Deleteவாவ்! மிக அருமை தோழி! கவிதைமணியில் எனக்கு முன்னோடியா நீங்கள் :)
ReplyDeleteநான் எனது கவிதை பிரசுரமாகியுள்ளதா என்று பார்க்க நினைவூட்டியதே தங்களது கவிதைமணி பதிவு தான் தோழி.நன்றிகள்.
Deleteஅருமையான கவிதை. வாழ்த்துகளும் சகோ!
ReplyDelete