Tuesday, May 31, 2016

சோர்விலா உள்ளங்கள்

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 18ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார். 
 
 
அவர் எடுத்த புகைப்படம்.

அவரது புகைப்படத்திற்கான எனது கவிதை.

முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !

தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !

சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !

நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !

உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !

 http://venkatnagaraj.blogspot.com/2016/05/164-dhg.html

வாய்ப்பளித்து, ஊக்கமூட்டும் சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுதல்களும்.


3 comments :

  1. அருமையான வரிகள் முகில். அங்கும் வாசித்துக் கருத்திட்டோம்...வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...