Sunday, May 11, 2014

புன்னகை ஒன்றே போதுமே !




பொன்னும்  வேண்டாம்
பொருளும்  வேண்டாம்
அன்பு   நிறைந்த
வாய்  நிறைந்த
மனம்  நிறைந்த
புன்னகை  ஒன்றே போதும் -
அன்னையவள்  குதூகலிக்க !


பாராட்டுப்  பத்திரம்  வேண்டாம்
பகட்டான  பட்டும்  வேண்டாம்
பளபளக்கும்  பொன்னும்  வேண்டாம்
பசிக்காக  நாமழுத  போது
தன்  உதிரம்  அதையே
பாலாக்கி  கொடுத்தவள் மீது
பாசம்  கொண்டாலே  போதும் !


கரம் பற்றி  நடை  பயிற்றுவித்தவள்
நாம்  துவண்டு  விழுந்தபோது
கை கொடுத்து தூக்கி  விட்டு
நம்பிக்கையை  காலமெலாம்
துணையாக்கித்  தந்தவள்
கரங்களை  ஆசையுடன்
பற்றியிருந்தாலே  போதும் !


அன்னையர்தம்  ஆசியில்
ஆசையெலாம்  நிறைவேறும்
அன்னை  காட்டிய  அன்பினை
கற்றுத்  தந்த  பாசம் தனை
பிற  உயிர்கள் மீதும் காட்டினால்
அகிலமே  அழகாகும் ! - அன்பிலே
ஆனந்தமே  நிலையாகும் !


அன்னையர்   தின    நல்வாழ்த்துகள் !


12 comments :

  1. பாடல் அருமை. படத்தேர்வும் அருமை.

    அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. // கரங்களை ஆசையுடன்
    பற்றியிருந்தாலே போதும் ! //

    அருமை... அருமை...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. மிக அருமை தோழி!
    அன்னையர் தின வாழ்த்துகள்!

    மேலும் என் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி தோழி, பயணம் காரணமாக இன்று தான் இணையம் வர முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. அருமையான கவிதை.....

    அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே.

      தங்களது அன்பான நல்வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  5. Replies
    1. மிக்க நன்றி சகோதரரே !

      Delete
  6. http://sivamindmoulders.blogspot.in/2014/05/blog-post_11.html unga kavithai ingirukku

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி. அவரது வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இதேபோல், பலரது பதிவுகளை சேர்த்தே அந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கிறார்.

      Delete
  7. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...