கரம் பற்றி
கதைகள் பல பேசியும்
சண்டையும்
சச்சரவும்
வந்த நொடியில்
மறைந்து
மறந்தும் போய்
விட
கண்மணி தங்கை
அவளின்
கண்களும் அகல விரிய
ஆசையுடன்
பார்க்கும்
சிறுகிள்ளை
அவளுக்கு
அன்பையெல்லாம்
வாரிச் சேர்த்து
சிறு
முத்தமொன்றை
பரிசாய்த் தந்து
ஆவலுடன் ஓடி
வரும்
உடன்பிறப்பின் – கை பற்றி
ஆர்வத்துடன்
கற்றுத் தந்து
கள்ளமில்லா
புன்னகை அதுவும்
பரிசாய்க்
கிடைத்திட
அவள்தம்
மகிழ்ச்சியும் வெற்றியுமே
பெரிதாய்த்
தோன்றிட
வாழ்வில்
வளமனைத்தும்
அவளது காலடியில்
சேர்ந்திட
வேண்டிடும் -
சகோதர மனம் !
