Tuesday, April 23, 2013

விலை கொடுத்து வாங்கும் கவலை !!!





பெருமையாய் தான்
எண்ணிக் கொள்ளும் மனம்  !
கையில் புதிதாய்  பகட்டாய் – ஆறாவதாக
ஒரு விரல்  முளைத்து விட்டது
போன்றொரு பிரமை !!!
அது அழகாய் கவர்ச்சிகரமாய்
காட்சியளிப்பதாய் மனதிற்குள்
ஓர்   பேய்   எண்ணம் !!
புகையிலையை சுருட்டி
பற்ற வைத்து – புகையை உள்ளிழுத்து
நெஞ்சில்  நிறுத்தி – இருமாது
புகையை வெளியேற்றுதல்
உலக மகா  திறமையென்று
அறிவிலிகளின்  அறிவுரை வேறு !!
ஆனால் உண்மையில் ???
நெருப்பில் சூடு பட்டு
எரிந்து கருகிய நிலையில்
புற்று நோயால் – செயலிழந்த
நுரையீரல் !! – புற்றும் மெல்ல
உடலெங்கும்  பரவ –
உயிருக்கே வந்தது  உலை !!!
தேவையா ?? – விலை கொடுத்து
வாங்கும் இக்கவலை ???

http://www.vallamai.com/?p=34734

14 comments :

  1. தனக்கு மட்டுமல்ல... தன்னை சூழ்ந்தோரையும் கெடுக்கிறது...

    அருமையான வரிகள் - சிறப்பாக சொன்னீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது நல்லாதரவிற்கும், தொடர் ஊக்கத்திற்கும் என் கோடானு கோடி நன்றிகளும், வணக்கங்களும் ஐயா !!!

      Delete
  2. நல்ல விழிப்புணர்வுச்சிந்தனை. அருமையான கவி. வாழ்த்துக்கள் தோழி!

    விலை கொடுத்துவாங்கும் கவலையுடன்
    தனக்கும் பிறர்க்கும் வைக்கும் உலை
    சிலைகூட முகம் சுழிக்கும்
    இவர் செயலை...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி. உண்மையான கருத்து. தங்களது வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!

      Delete
  3. நல்ல விஷயத்தை சொல்லும் கவிதை இந்த அறிவிலிகள் என்று முழிப்பார்கள்

    ReplyDelete
  4. உணர்பவர்களின் வாழ்வு நலமாய் பலகாலம்.உணராதவர்கட்கு துணையாய் வர புற்றுநோய் காத்துக் கிடக்கிறது. வந்த பின் துடிப்பதைவிட வருமுன் காப்பது சிறப்பன்றோ ?

    ReplyDelete
  5. ''..தேவையா ?? – விலை கொடுத்து
    வாங்கும் இக்கவலை ???...'''
    கவி வரிகள் மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2013/04/15/272-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் கவியே !! தங்களது கவிதையையும் இரசித்தேன்.

      Delete
  6. புகை நம்மை பிடிக்கிறது,இது குறித்தான விழிப்புணர்வு இப்போதைய தலைமுறைக்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  7. கருத்தும் கவினயமும் உள்ள கவிதை. சிகரெட்டை ஆறாவது விரலாகக் கற்பனை செய்தது புதுமையே.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  8. அருமையான விழிப்புணர்வு கவிதை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும்,அன்பான வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...