நளினமாய் வளைந்தாடி
தென்றலுடன் கவிபாடி
மெல்லிசை கீதங்களை
செவிகளுக்கு விருந்தாக்கி
காணும் கண்களுக்கு
எழில் காட்சியாகி
மனம் மையல் கொள்ளச் செய்த
இரத்தினக் கம்பளம் போர்த்திய
பெண்ணணங்கே !
நீ எங்கே ?
பாவனைகள் பல காட்டி
நீ நடனமாடிய
நில மேடையில் - இன்று
கல்லும் மண்ணும்
கட்டிடமாய் உயர்ந்து நிற்க
ஒவ்வோர் நாளும்
உன்னைத் தேடி ஓடிவரும்
தென்றலதுவும் - பலத்த
ஏமாற்றத்துடனே ஏங்கிப் போய்
திரும்பிச் செல்கிறது !
தென்றலும் தான்
ஏற்க மறுக்கின்றது !
உடன் விளையாட
நீ இல்லை என்ற உண்மையை !
அதனுடன் கைகோர்த்து
களிநடம் புரியவேனும்
மீண்டு வந்திட மாட்டாயோ
இரத்தினப் பட்டுடுத்தி
மலரும் மணியும் ஆபரணமாய் சூடும்
எழிலார்ந்த நிலமகளே !!!
படமும் கவிதையும் மனத்தைக் கவர்ந்தன... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின வரிகள் நன்று... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் நன்று.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டு வந்திட மாட்டாயோ
ReplyDeleteஇரத்தினப் பட்டுடுத்தி
மலரும் மணியும் ஆபரணமாய் சூடும்
எழிலார்ந்த நிலமகளே !!!
அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நன்றிகள் பல ஐயா.
Deleteபடமும் கவிதையும் அருமை தோழி!
ReplyDelete//மனம் மையல் கொள்ளச் செய்த
இரத்தினக் கம்பளம் போர்த்திய
பெண்ணணங்கே !
நீ எங்கே ?// செங்கல் காட்டில் காணாமல் போய்விட்டாளே!!! :(
உண்மை தான் தோழி.இந்நிலை நீடித்தால், நாளை நம் நிலை கேள்விக்குறி தான்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் பல தோழி.
அழகிய படமும் அற்புதமான கவிதையும் தோழி!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல தோழி.
Deleteதமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteபடமும் கவிதையும் அருமை
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteகடல் ஓடி வந்து காலை நனைக்கிறது.கூடவே கவிதை மனதை எட்டிப்பிடிக்கிறது,வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஅருமையானதோர் பதிவு
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே.
Delete''..இரத்தினப் பட்டுடுத்தி
ReplyDeleteமலரும் மணியும் ஆபரணமாய் சூடும்
எழிலார்ந்த நிலமகளே !!!......
நல்ல கற்பனை இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete