Wednesday, July 17, 2013

சகோதர மனம் !



கரம் பற்றி
கதைகள் பல  பேசியும்
சண்டையும் சச்சரவும்
வந்த நொடியில் மறைந்து
மறந்தும் போய் விட
கண்மணி தங்கை அவளின்
கண்களும் அகல  விரிய
ஆசையுடன் பார்க்கும்
சிறுகிள்ளை அவளுக்கு
அன்பையெல்லாம் வாரிச் சேர்த்து
சிறு முத்தமொன்றை
பரிசாய்த் தந்து
ஆவலுடன்  ஓடி வரும்
உடன்பிறப்பின் கை பற்றி
ஆர்வத்துடன் கற்றுத் தந்து
கள்ளமில்லா புன்னகை அதுவும்
பரிசாய்க் கிடைத்திட 
அவள்தம் மகிழ்ச்சியும் வெற்றியுமே
பெரிதாய்த் தோன்றிட
வாழ்வில் வளமனைத்தும்
அவளது காலடியில் சேர்ந்திட
வேண்டிடும் - சகோதர மனம் !
 



15 comments :

  1. சந்தோசத்தில் கண்களும் கலங்கி விட்டது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி சகோதரரே...

      Delete
    2. சகோதரரே...தங்களது தளம் கண்டேன்...பல செய்திகள், தகவல்களின் தொகுப்பாய் அருமையாய் உள்ளது. மறுமொழி இட முயன்றேன். comment box வரவில்லை.Reply என்று கொடுத்தால், comment box இல் "Sorry, the page you were looking for in this blog does not exist. " என்று வருகிறதே?

      Delete
  3. காதலை மட்டுமே சொல்வதற்கு பலரும் கவிதை பக்கம் சாய நீங்க ஒரு அழகான சகோதர பாசத்தை சொல்வதற்கு சாய்ந்திருக்கிறீர்கள். அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தங்களது அன்பான வாழ்த்துகட்கும், கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  4. சகோதர பாசம் என்றும்
    சாகா வரம்! வாழ்த்துக்கள் தமிழ் முகில்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  5. sure!..''..வாழ்வில் வளமனைத்தும்

    அவளது காலடியில் சேர்ந்திட

    வேண்டிடும் - சகோதர மனம் !..''
    Eniya vaalththu...
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete
  6. சகோதரபாசம் கால்டியில் மட்டுமல்ல மனம் துளைத்துச்சென்று விடக்கூடியதாயும்,வல்லமை வாய்ந்தாயுமாகவே/

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா....

      Delete
  7. வாழ்வில் வளமனைத்தும்
    அவளது காலடியில் சேர்ந்திட
    வேண்டிடும் - சகோதர மனம் !

    இனிய மணம் பரப்பும் சகோதர மனம் ..
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...