Sunday, August 25, 2013

தனிமை - இனிமை



ஆயிரமாயிரம் எண்ணங்கள்
எத்துனையோ  நினைவுகள்
அணி கட்டிக் கொண்டு
மனதினுள் நீயா நானா என்று
முண்டியடித்து வர முயன்றதில்
ஏகப்பட்ட தள்ளு முள்ளு !!
இவையனைத்தையும் சீர்படுத்தி
செம்மையாய் பிரித்தறிந்து
தீர்வறிவதற்குள் பாவம்
துவண்டுதான் போய்விட்டது  மூளை !
அதுவும் தான் தேடி அலைந்தது -
ஓய்வும் உறக்கமும் !
துன்பம் துயரமனைத்தையும்
தனிமைப் படுத்திவிட்டு
அமைதியின் கரங்களில்
நம்மை ஒப்புவித்தால்
தனிமையும் கூட இனிமையே !!!



14 comments :

  1. தனிமையிலே இனிமை காணலாம். நன்று

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. கண்டிப்பாக சில வேளைகளில் நமக்கும் நம் மூளைக்கும் தனிமை அவசியம். அதுவே இனிமாகும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  3. நிச்சயம் தனிமை இனிமையே
    அதனை ரசிக்கத்தான் பக்குவம் வேண்டும்
    அந்தப் பக்குவம் இல்லாதோருக்கு அது
    வெறுமைதான்
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. Replies
    1. தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  5. ஆனாலும் வெறுமைதான்

    ReplyDelete
    Replies
    1. உண்மையே !! தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. /// அமைதியின் கரங்களில்
    நம்மை ஒப்புவித்தால்.... ///

    அவரவர் உணர வேண்டிய வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  7. தனிமை சுயமதிப்பீடு செய்ய பட்டைத் தீட்டிக் கொள்ள
    கற்பனைகள் ஊற்றெடுக்க சிந்தனை சீர் செய்ய
    என இன்னும் பலவிதத்திலும் பயன்படும்.
    அதனை சிறப்பாகப் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
    நல்லதொரு கருத்து கொண்ட கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை தோழி. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...