கள்ளமறியா கிள்ளை உன்னிடம்
காதுகள் விறைக்க - புயலென
துள்ளியோடும் முயல் குட்டியும்
களிப்புடனே கையசைத்து சொல்லும்
மகிழ்வான சேதி என்னவோ
?
துளி அரவம் கேட்டாலே
தாவி ஓடி ஒளிந்திடும்
பஞ்சுப் பொதி முயலும்
தயக்கம் சிறிதுமில்லாது
அருகில் நின்று
அழகு தேவதை
உனை இரசிக்கிறதோ ?
படத்திற்கேற்ற கவிதையா...?
ReplyDeleteகவிதைகேற்ற படமா...?
அழகு... வாழ்த்துக்கள்...
படத்தைப் பார்த்த பின் உதயமானதே இக்கவிதை ஐயா.
Deleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
படமும் கவிதையும் அருமை..
ReplyDeleteஅழகான படமும் அதற்கேற்ற வரிகளும் அருமை ! வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரா .த .ம 3
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி தோழி.
Deleteகவிதைக்கு ஏற்ற பொருத்தமான படம்,
ReplyDeleteஒருவேளை படத்தைப் பார்த்ததால் உதயமான கவிதையோ
ஆம் ஐயா. படத்தைப் பார்த்தபின் உதயமானது தான் இக்கவிதை.
Deleteதங்களது வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.
படமும் கவிதையும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றனவே!
ReplyDeleteத.ம. +1
தங்களது ஊக்கமூட்டும் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரரே.
Deleteதமிழ்மண வாக்கிற்கு நன்றிகள்.
தமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteவலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். கவிதையைப் படித்தேன். பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Delete