காணும் புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலயமானதே !
நீ எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எமக்கு
பொக்கிஷமானதே !
குளிர்சாதன பெட்டி கணினி
வீட்டுச் சுவர் - தொலைக்காட்சி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !
நீ செய்யும் சிறு சிறு
உதவிகளில் எலாம்
சொக்கிப் போய் தான்
நிற்கின்றேனே !
செய்யும் நற்காரியத்திற்கு
கைத்தட்டலுடன் ஊக்கம் கேட்கும்
உன் அழகு குணம் தனை
மெச்சுகிறேன் !
உறங்கையில் நீ உதிர்க்கும்
சிறு முறுவல் கண்டால் -
கண்ணிமையாது தான்
காண விழைகிறேன் !
என் கண்ணே உன் மீது
பட்டுவிடுமோ என்று
சடாரென
திரும்பிக் கொள்கிறேன் !
என் மனநிலை அறிய
முகத்தையும் கண்களையும்
உற்று நீ நோக்குகையில்
எனை மறந்து சிரிக்கின்றேன் !
உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கின்றேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே என்னைத் தேடுகிறேன் !
என் கண்ணான கனியமுதே !!!
பிள்ளைக் கனியமுதே ! - 1 பிள்ளைக் கனியமுதே ! - 2
பிள்ளைக் கனியமுதே ! - 3 பிள்ளைக் கனியமுதே ! - 4
பிள்ளைக் கனியமுதே ! - 5
சிறப்பான கவிதை அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரா .
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் சகோதரி.
அழகான வரிகள்...
ReplyDeleteரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteரசிக்கவைக்கும் வரிகள்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரரே !
Deleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் !
அன்னையர் தினம் அன்று மழலை கவிதை.... சிறப்பாக இருந்தது.... பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே !
Deleteகுழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் நாமும் குழந்தைகளாக மாறிப்போகிறோம். நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாமே என மனம் ஏக்கம் கொள்கிறது.
ReplyDeleteகவிதை நன்று.
உண்மை தான் ஐயா. அந்த நாட்கள் நம் வாழ்நாளின் இனிய நாட்கள்.... எவ்வளவு விலை கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத நாட்கள்.
Deleteதங்களது அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.