காதலின் கதகதப்பில்
கலந்திட்ட ஜீவன்கள்
ஒருவருக்கொருவர்
ஆதரவாய் அனுசரனையாய்
அன்பு உலகில்
ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் -
சுற்றியிருக்கும் சூழல் தனையே
மறந்தவர்களாய் !
அவர்தம் வாழ்விடத்தை விட்டு
நம் வசதிக்கேற்ப கூண்டில்
குகையில் அடைக்கிறோம் !
அவர்களை காட்சிப் பொருளாய்
நாம் எண்ணிக் கொள்கிறோம் ....
உண்மையில்
நாம் அவர்களுக்கு
காட்சிப் பொருளாகிறோம் !
சமயங்களில் அதீத விளையாட்டால்
அவைதம் இரையாகவும்
மாறிப் போகிறோம் !
இயற்கையின் இயல்பை
மாற்ற எத்தனித்தால்
அழிவு நமக்கென்பதை
நாம் உணரும் காலம் எப்போது ?
அனைத்தும் ஜீவன்களே...
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.
Deleteதமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteஅருமையான வரிகள்...உண்மையை உரைக்கின்றன...
ReplyDeleteஇயற்கையின் இயல்பை
மாற்ற எத்தனித்தால்
அழிவு நமக்கென்பதை
நாம் உணரும் காலம் எப்போது ? // எப்போது??
நன்றி சகோதரரே.
Deleteகவிதை அருமை...
ReplyDeleteஉண்மையை உரைக்கிறது...
நன்றி சகோதரரே.
Deleteரசித்தேன். அருமை.
ReplyDeleteஅவைகளின் இயல்பறியாமல் வதைக்கிறோம். சக்தி அறியாமல் அடைக்கிறோம்!
உண்மை தான் சகோதரரே.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
உண்மைதான்..அருமையான கவிதை
ReplyDeleteநன்றி தோழி.
Delete