கள்ளமறியா கிள்ளை உந்தன்
வெள்ளந்தி முகம் தனில்
தொக்கி நிற்கும் தேடல்
எதை எதிர் பார்க்கிறதோ ?
ஓய்வென்பதையே எண்ணாது
சுழலும் உலகில்
எதைக் கண்டுனக்கு
இத்தனை யோசனை ?
நாடியில் பிஞ்சு விரல்
தாளம் போட
மனதில் அலைமோதும்
எண்ணங்கள் என்னென்னவோ ?
ஆச்சர்யமும் ஆர்வமும்
விரிந்திருக்கும் விழிகளில்
விரவிக் கிடக்க - வார்த்தை
உதிர்க்க உதடு துடிக்கிறதோ ?
சிப்பியென உதடுகள் விரிந்து
உதிர்க்கவிருக்கும் முத்து வார்த்தைகளை
சரமென தொடுத்து கவிதை மாலையாக்கிட
ஆவலுடன் காத்திருக்கிறாரா அன்புத் தந்தை ?
நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=59790
வாவ் அழகோ அழகு - குழந்தையும் கவிதையும்!
ReplyDeleteவாழ்த்துகள் தோழி
நன்றி தோழி.
Deleteஅருமை...
ReplyDeleteவல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிகள் சகோதரரே.
Deleteபுகைப் படத்தைப் பிரதி எடுத்த கவிதை. நன்றி
ReplyDeleteநன்றி சகோதரரே. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
Deleteபுகைப்படம் அழகு. கவிதை அழகு. இரண்டுக்கும் நடக்கும் போட்டி நன்று.
ReplyDeleteநன்றிகள் பல சகோதரரே.
Deleteஅருமை... அருமை...
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஅந்தக் குழந்தையும் அழகு....வரிகளும் அழகோ அழகு!
ReplyDeleteவல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துகள்!!
நன்றிகள் சகோ.
Deleteகுழந்தையே ஒரு கவிதை. கவிதைக்கு ஒரு கவிதை! அருமை.
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் பல சகோதரரே.
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/