பெண்ணென பூமிதனில்
பிறவியெடுத்திட்ட உயிர்களனைத்தும்
உளந்தனில் இயல்பாகவே
கொண்டுவிட்ட உன்னத குணம் -
விட்டுக் கொடுக்கும் தன்மை !
அன்னை தந்தையர்க்கு எந்நாளும்
மகளென்பவள் இளவரசியே !
அண்ணன் தம்பி அக்கா தங்கையென
உடன்பிறப்புகட்காய் தொடங்கும்
விட்டுக் கொடுக்கும் மாண்பு -
தொடர்கிறது அவளது வாழ்நாளெலாம் !
கல்வி கேள்வி கலை இலக்கியம் என
எதில் உயர்ந்திருந்தாலும் - தன்னிலை தாழ்த்தி
விட்டுக் கொடுத்து விலகிச் செல்ல
கற்றுத் தரப்படும் - நிர்பந்திக்கப்படும் பெண்
வாழ்நாளெலாம் விட்டுக் கொடுக்கிறாள் -
தன் உறவுகள் தன்னுள் உதித்த பிள்ளைகள்
நண்பர்கள் சுற்றம் என் அனைவருக்குமாய் !
மகளிருள் இயல்பாய் விதைந்திருக்கும் இம்மாண்பு
உலகெலாம் விதைக்கப்பட்டால் -
உயிர்பெறும் உயர் கருத்து
விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை !
உலகும் உன்னத இடமாகும்
வஞ்சம் பொறாமை பகையனைத்தும் மறைந்து
அன்பில் நிலைத்து மகிழ்ந்திருக்கும் !
அருமை தோழி! மகளிர் தின வாழ்த்துக்கள் தமிழ்முகில் :)
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅருமை....
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துகள்.
மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
Deleteஅருமை...வாழ்த்துக்கள்..
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
Delete