ஏடெடுத்து எழுதி வைக்க
எத்துனையோ நினைவுகளுண்டு !!!
நினைவுகளை எல்லாம்
வண்ண மலர்ச்சரமாக்கி
அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்
இலயித்திருக்க பொழுதேது ???
காற்றினில் கலந்து வந்து
நாசியில் படிந்திடும் - மலரின்
நறுமணம் போல்
நினைவலைகளில் கலந்து வந்து
நெஞ்சமதில் இனித்திடும்
இனிய இன்ப நினைவுகள் !!!
கதிரவனின் ஒளி பட்டு
மெல்ல விலகி ஓடும்
பனித்திரை என - உள்ளமதில்
படிந்த துன்பச் சுவடுகளை
துடைத்தெறியும் பேரலையென
மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!
மலரும் நினைவுகளால்
மனதினில் உருவாகுமோர்
மகிழ்ச்சி ஊற்று ! - அது
இதழின் ஓரத்தில்
கொண்டு வருமே
அழகானதோர் புன்னகை கீற்று !!!
நினைவுகள் - அவை தாம்
ஆகுமே உள்ளக் காயங்கட்கு
நல்லதோர் அருமருந்தாய் !!
அவையும் தான் வருடுமே
துடித்த தவித்த உள்ளங்களை
மென்மையான மயிலிறகாய் !!!
பி.தமிழ்முகில் நீலமேகம்
http://www.vallamai.com/?p=36347
நினைவுகள் அதனதன் தன்மை கொண்டு அருமருந்தாகவும், கிழிக்கும் கத்தியாகவும்....
ReplyDeleteஉண்மை தான் தோழி.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
ரசிக்க வைக்கும் நினைவுகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஉங்கள் மலரும் நினைவுகள் என் நினைவுகளையும் மலர வைத்தன. ரசித்தேன்.
ReplyDeleteதங்களது வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅழகான தருணங்கள்
ReplyDeleteஅசைபோட்ட கவிஅருமை!
வாழ்த்துக்கள் தோழி!
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteமலரும் நினைவுகள் அருமை
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அறியத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !
Deleteமலரும் நினைவுகளால்
ReplyDeleteமனதினில் உருவாகுமோர்
மகிழ்ச்சி ஊற்று ! - அது
இதழின் ஓரத்தில்
கொண்டு வருமே
அழகானதோர் புன்னகை கீற்று !!!//எப்போதுமே மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஅருமையான நினைவலைகள்! வாழ்த்துக்கள்! (அழகிய கன்றுக்குட்டியைக் குளிப்பாட்டும் அதை விட அழகிய இரண்டு தமிழ்க் குழந்தைகள் யார்?)
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. அந்தப் புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஐயா.
ReplyDeleteவணக்கம் சகோதரா .
ReplyDeleteசிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள் .leyout சென்று
goole folowers இணையுங்கள் .
மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் .
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
ReplyDeleteநான் ஏற்கனவே தங்களது தளத்தில் இணைந்துள்ளேன் தோழி.