காரிருளில் காசினியும்
கண்ணயர்ந்திட - இரவெலாம்
கண்விழித்து ஒளி விளக்காய்
கண்ணிமையாது காத்து நிற்கும்
பொன்னான வெண்மதியாளுக்கும்
காற்றின் இசைக்கேற்ப தலையசைத்து
கானம் பாடும் புள்ளினங்கட்கு
காலமெல்லாம் இல்லங்களாகி - ஒற்றைக்
காலில் நின்று - பிறர்க்காய் வாழ்தலே தவமென்று
வாழ்ந்திடும் வானுயர் மரங்கட்கும்
சலசலவென்று சலிக்காது
சங்கீதம் பாடி - பாரபட்சம் பாராது
சமத்துவம் பேசி - மேகத் தோழியுடன்
சந்தம் பேசும் - நதிப் பெண்ணவளுக்கும்
இங்கே வனிதையவளின்
இனிமையான மெல்லிசைக் கச்சேரி !!!
ரசிக்க வைக்கும் கச்சேரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
Deleteஆகா! அருமையான கச்சேரி!
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் தோழி !!!
Deleteஅடடா... இவர்களுக்குக் கேட்ட இந்த மெல்லிசைக் கச்சேரி எனக்குக் கேட்டகாமல் போகலாமோ...:).
ReplyDeleteவிடாமல் தேடி வந்திருந்து ரசித்திட்டேன்! ஆகா... அருமை!
வாழ்த்துக்கள்! நடத்துங்கள்...
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!!
Deleteநல்ல கச்சேரி! நல்ல கரு!
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete