யாம் நலமாய் வளமாய் வாழ
எம்மை வாழ்க்கைப் பாதையில் நெறிப்படுத்த
உங்களையேயே நீங்கள்
உருக்கிக் கொண்டீர்கள் - மெழுகாய் !!!
பொறுப்புச் சிலுவைகளை உமது
தோள்களில் காலமெலாம் சுமக்கின்றீர்
சலிப்பேதும் கொள்ளாது உரைக்கின்றீர்
சுமைகளே சுகங்களாகிப் போயினவென்று !!!
எமக்குச் சுகமளிப்பவற்றை எல்லாம்
தேடித் தேடி வாங்கித் தந்தீர்
அத்துடன் உழைப்பின் பலனை
ஒவ்வொரு சிறு காசிலும் உணர்த்தினீர் !!!
உறவின் உன்னதத்தையும் - நட்பின்
மகத்துவத்தையும் எமக்கு உணர்த்தினீர் !!!
உதவும் மனப்பான்மை தனையும்
நீரே எம்மில் வளர்த்தீர் !!!
வெற்றி அது புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றாலும்
தோல்வியால் துவண்டிடும் நிலை வந்தாலும் -
எதுவாயினும் சமமேயென்று
ஏற்றுக்கொள்ள கற்றுத் தந்தீர் !!!
எங்கள் வாழ்வின் பொன்னால் பொரித்த
வெற்றி ஏடுகள் எல்லாம் உங்கள்
உழைப்பு மற்றும் உதிரம் கொண்டு
வளமாய்வாழ வழிபலசெய்த
ReplyDeleteஉளமாம் கோவிலுறை
உத்தமனாம் தந்தையை
மனமார நினைந்தேத்தி
தரமான கவிசொன்னீர்
வரலாறு போற்றுமே வியந்து...
நல்ல கருத்துச்செறிவு. அருமை!
வாழ்த்துக்கள் தோழி !
அனைத்துத் தந்தையர்க்கும் அன்பு வாழ்த்துக்கள்!
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி. தங்களுக்கு என் தந்தையர் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
Deleteநல்ல வரிகள். இனிய தந்தையர் தின வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி கவியே!!! தங்களுக்கு என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !!!
Deleteதந்தையின் அன்பை உணர்த்தும் அழகு கவிதை! வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி தோழி !!! தங்களுக்கு என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !!!
Deleteஅருமை... தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா !!! தங்களுக்கு என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !!!
Deleteஅருமை... தந்தையர் தின வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களை எனது தளத்திற்கு வரவேற்கிறேன். தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
Deleteமிகவும் அருமையான கவிதை .
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!
Delete