பகட்டான வாழ்வினை
மக்களுக்கு அளிப்போமென
வாக்குறுதிகளை அள்ளி வீசி
இலவசங்களால் மக்களின்
வாயடைத்து விட்டு
அடிப்படைத் தேவைக்கே
அல்லாடச் செய்கிறது
இன்றைய அரசியல்!!
இலவசமாய் மின் கருவிகள்
வரிசைகட்டி வாசலை
அடைத்துக் கொண்டு
காத்து நிற்கின்றன!
ஆனால், பாவம்
அவற்றிற்கெல்லாம் உயிர் வழங்க
அவர்களிடம் மின்சாரமில்லை!
வேறொன்றுமில்லை - மின்வெட்டு!!
இலவசமென்று கொடுத்த
வாக்குறுதிக்காக - இருப்பை
எல்லாம் துடைத்தெடுத்து
ஊருக்கே விநியோகம் முடிந்தது!
இப்போதோ - கொடுக்கப்பட்ட அனைத்தும்
பட்டுவாடா செய்யப்படுகின்றன!
அத்தியாவசியப் பொருட்களின்
விலை ஏற்றமென்ற பெயரில்!!
அரசியல் போட்டியும் சண்டையும்
கல்வியில் கூடவா
தலையிட வேண்டும்?
வருபவரெல்லாம் அவர்தம்
வசதிக்கேற்ப கல்வியினை
பந்தாட்டமாய் எண்ணி விளையாட
இடையில் மாட்டிக்கொண்டு
முழிப்பதென்னவொ
மாணவரும் பெற்றோருமே !!
இறைவா! எம் மக்கட்கு
நல்வாழ்வும் - நிறைவானதொரு
பொன்மனமும் - பகுத்தறியும்
பேரறிவும் - நல்லன
எண்ணும் மனமும்
பேராசையில்லா இதயமும்
கிட்டும் நாளும் தான்
எந்நாளோ?
அந்நாளே தெரியுமே...
வாழ்வின் விடியல்!!!
http://www.muthukamalam.com/verse/p1211.html
இன்னும் அதிகமாய் இலவசமாய் நோயும்,சுற்றுசூழல் மாசும்,கட்டுக்கடங்கா கடனும் அதனால் மன உளைச்சலுமே அதிகமாகிறது
ReplyDeleteஉண்மை தான் ஐயா.மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உண்மைதான் தோழி! மாற்றம் வரும் விடியல் வரும் ...அதற்கே இளைய தலைமுறையினரை வழிநடத்துவோம் ...
ReplyDeleteமுத்துக்கமலம் பற்றியும் அறிந்து கொண்டேன்..நன்றி! வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteவார்ப்பு, வல்லமை,காற்று வெளி, நந்தலாலா, சொல்வனம், வல்லினம், தங்கமீன், உயிரோசை, திண்ணை போன்ற பல இணைய இதழ்கள் உள்ளன தோழி.
அப்படியா..நன்றி தோழி
Delete/// இடையில் மாட்டிக்கொண்டு
ReplyDeleteமுழிப்பதென்னவொ
மாணவரும் பெற்றோருமே ///
உண்மை... வேதனை...
ஆம் ஐயா.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
//இறைவா! எம் மக்கட்கு
ReplyDeleteநல்வாழ்வும் - நிறைவானதொரு
பொன்மனமும் - பகுத்தறியும்
பேரறிவும் - நல்லன
எண்ணும் மனமும்
பேராசையில்லா இதயமும்
கிட்டும் நாளும் தான்
எந்நாளோ?
அந்நாளே தெரியுமே...
வாழ்வின் விடியல்!!!///
உண்மைதான்... சரியாக சொன்னீர்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteவணக்கம் சொந்ததமே!வரைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.காத்திருக்கிறோம் அவ்விடியலுக்காக...சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteதங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteமாற்றம் வரும் விடியல் வரும் காத்திருப்போம்
ReplyDeleteVetha.Elangathilakam.
விடியல் நிச்சயம் மக்கள் வாழ்வில் ஒளியைக் கொண்டுவருமென நம்புவோம்.
Deleteதங்களது வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!
மாற்றம் நிச்சயம் வரும்..
ReplyDeleteமாற்றம் நிச்சயம் நல்வாழ்வினைத் தருமென நம்புவோம். தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!
Deleteநிகழ் கால தேவை பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்... விடியல் நிச்சயம் பிறக்கும்...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே !!!
Delete