Tuesday, June 11, 2013

பேனா

http://us.123rf.com/400wm/400/400/serezniy/serezniy1203/serezniy120302395/12849801-old-books-ink-pen-and-ink-bottle-isolated-on-white.jpg 





பாவலரின் கற்பனை எனும்
கருவினில் உதித்த
கவிதைக் கிள்ளைக்கு  
உயிர் கொடுத்து
உரு கொடுத்து
பத்திரமாய் ஈன்றெடுக்கும்
அன்பு அன்னை !!!


உடலில் மை எனும்
உதிரம் கொண்டு
உழைத்து ஓடாய் தேய்ந்து
உதிரமனைத்தும் சுண்டி
சோகையான உடன்
உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம்
சற்றும் கவலையே இல்லாமல் !!!


பாராட்டு சிம்மாசனம் எட்ட
படிக்கட்டுகளாய் விளங்கி
எழுத்துக்கு உயிர் தந்து
எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான
பண்பான உழைப்பளிகளின்
பாடு ஒரு நாளும்
பாராட்டப்படுவதில்லை !!!


மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
உருவான திர்மானத்தில்
வேள்வித்தீ என
மக்கள் உள்ளங்களில் 
கோலோச்சும் சிந்தனைகள்
எழுதுகோல் துணைகொண்டு
உருவாக்கப்பட்டவை அன்றோ ???



12 comments :

  1. Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  2. சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா...

      Delete
  3. அடடா... யாரும் கவனிப்பதில்லைத்தான் இப்போது.
    அதற்குக் காரணம் வளர்ந்துவரும் தொழில்நுட்பம். பொறியியல்தட்டச்சு... :)

    நல்ல கற்பனை! சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி.இப்போது தமிழ் தட்டச்சும் மிக எளிதான ஒன்றாகிவிட்ட படியால், பல நேரங்களில் நானே கவிதைகளை நேரடியாக வலைப்பூவில் பதிவிட்டு விடுகிறேன்.எழுதி வைக்க வேண்டும் என்றெண்ணுவதுண்டு.ஆனால், செய்வதில்லை.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. உண்மைதான்..எங்கே எழுதுவதே அழிந்துவிடுமோனு ஒரு பயம் இருக்கு.. அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  5. எழுதுகோளுக்கு சிறப்பான கவிதை ..அருமையான கற்பனை...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி....

      Delete
  6. ''...பாராட்டு சிம்மாசனம் எட்ட

    படிக்கட்டுகளாய் விளங்கி

    எழுத்துக்கு உயிர் தந்து

    எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான

    பண்பான உழைப்பளிகளின்

    பாடு ஒரு நாளும்

    பாராட்டப்படுவதில்லை !!! ''
    மிக நல்ல வரிகள்.
    இனிய வாழ்த்து.
    நான் எழுதிய பேனா பற்றிப் பாருங்களேன். இதோ இணைப்பு.

    http://kovaikkavi.wordpress.com/2011/12/12/20-%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88/

    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி கவியே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...