மானுடர்களே !!!
எதற்காக மரங்களில்
எண்களை பதிக்கின்றீர் ?
அவைகளென்ன மரண தண்டனைக்
கைதிகளா என்ன ?
எத்துனை பேருக்கு
தண்டனை நிறைவேற்றினோம் -
இன்னும் எத்துனை பேருக்கு
தண்டனை நிறைவேற்ற வேண்டுமென
கணக்கிடுவதற்காகவோ ???
http://www.muthukamalam.com/verse/p1210.html
அதானே...? வித்தியாசமான பார்வை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி ஐயா.
Deleteஎண் இடப்பெற்று காக்கப்படுவதாகவே நினைத்திருந்தேன்..யாரும் வெட்டக்கூடாதென்று .. நீங்கள் சொல்வது வேறுவிதமாய் உள்ளது.. :)
ReplyDeleteநானும் பலகாலம் அப்படித்தான் எண்ணினேன். பல இடங்களில், சாலைகளின் இரு மருங்கிலும் இருக்கும் மரங்களனைத்தும் விரிவாக்கப் பணி என்று வெட்டி வீழ்த்தப் படுகின்றன. அதைப் பார்த்தால், வீட்டின் கூரையை பிய்த்தெறிந்து விட்டு வெட்ட வெளியில் நிற்பது போன்றே உள்ளது.
Deleteஅதனால் தான் இப்படியும் இருக்கலாமோ என்றொரு சிந்தனையில் தோன்றிய கவிதை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி தோழி.
வேறு கோணத்தில் சிறப்பான சிந்தனை...
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Deleteஅவைகளென்ன மரண தண்டனைக்
ReplyDeleteகைதிகளா என்ன ?
நல்ல கேள்வி.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!
Delete