Thursday, May 21, 2015

மரமே ! நீ என் நண்பனே !



தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத
அற்புதச் சிறுவனா நீ ? - வீட்டினுள் அடையாது
கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் - குளுமையான
வேப்ப மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?

ஓடியாடி விளையாடுதல் - பம்பரம் சுற்றுதல்
கோலிக்குண்டு - மரம் ஏறல் இவைதாம்
உனக்கு பிடித்தமான விளையாட்டுகளோ ?
உந்தன் வீரத் தழும்புகளே சொல்கின்றனவே !

 மரத்தில் எத்தனை பறவைக் கூடுகள்
 ஒவ்வோர் கூட்டிலும் எத்தனை முட்டைகள்
 தெளிவாய் கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?
 நாளை நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !

இரவில் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்
படுத்தபடியே  வானைப் பார்த்து
நிலவை இரசித்து வெள்ளி எண்ணினால்
உறக்கமும் ஆனந்தமாய் கண்கள் தழுவாதோ ?

பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை
உனது சொத்து !- இயற்கையின் மடியில்
உன் ஆனந்தம் நிலையானதாக
மரங்களை காக்க உறுதி கொள் !

http://www.vallamai.com/?p=57636










4 comments :

  1. சமூக விழிப்புணர்வுடன் கூடிய அழகான அருமையான ஆக்கம். படத்தேர்வு ஜோர். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு...

    ரசித்தேன்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...