Monday, October 13, 2014

சிந்தனை திருட்டு

பிறரது சிந்தனையை திருடுதல் முறையோ ?

அல்லது ஒருவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களும் கருத்துக்களையும் கூட நகல் எடுத்து விடக்கூடிய அளவுக்கு இன்று விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ ? 

பதிவினை வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதை Copy செய்து தங்களது வலைப்பக்கத்தில் Paste செய்து விடுகிறார்களே ! இவர்களது சுறுசுறுப்புக்கு முன் எறும்பு கூட தோற்று விடும் போல் உள்ளதே !

கேள்வி எழுப்பினால், இத்தகையோரிடமிருந்து பதில் கிட்டுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எனது கவிதை புன்னகை ஒன்றே போதுமே !  இதனை, சிவராமா என்பவர், தனது  Mind Moulders Blog என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.அதற்கான இணைப்பு http://sivamindmoulders.blogspot.com/2014/05/blog-post_11.html. பதிவினை நான் வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதனை எடுத்து தன் வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறார்.

எனது கவிதையை வெளியிட்டு உள்ளாரே, எனது பெயர் , வலைப்பூ முகவரியையேனும் சேர்த்து கொடுத்திருக்கலாமே. அவரது வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இதேபோல், பலரது பதிவுகளை சேர்த்தே அந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கிறார். 


4 comments :

  1. சகோதரி தென்றல் கீதா அவர்களின் கவிதையினைக் கூட, இவர் தனது தளத்தில் பதிவிட்டிருப்பதாக ,இன்று சகோதரி அவர்க்ள் தனது பதிவினில் சுட்டிக் காட்டியிருந்தார்கள், தங்களின் தளத்திற்கு வந்தால், தாங்களும் அதே நபரை சுட்டிக் காட்டியுள்ளீர்கள்
    இதுபோன்ற மனிதர்கள் திருந்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு பின்னூட்டம் இட்டிருந்தேன் ஐயா. ஆனால், பதிலேதும் இல்லை. பார்க்கலாம்.

      Delete
  2. ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

    வருத்தமாக உள்ளது தோழி!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வதென்று தெரியவில்லை தோழி. பார்க்கலாம். இத்தகைய செயலை செய்யும் முன் சற்று சிந்திக்க வேண்டும் இவர் போன்றோர். உணர்வார்களா என்பது தெரியவில்லை.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...