சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் மலையடியை முத்தமிடும் நதி - கவிதை எழுத அழைப்பு என்ற பதிவில் இந்த அழகிய இயற்கை காட்சிக்கு கவிதை எழுத கடந்த 12ம் தேதி அழைப்பு விடுத்திருந்தார்.
இயற்கை காட்சியும் அதற்கான கவிதையும் இதோ:
நீல வானுக்கும்
நீல நதியதற்கும்
இணைப்புப் பாலமாய்
மலை முகடுகள் !
வானுக்கான தன் அன்பை
நதிப் பெண்ணவள்
நாணி நடமிட்டு
மலையதன் அடிதனில்
மெல்ல கிசுகிசுத்துச் செல்ல
அது மலைச் சிகரத்தில்
எதிரொலித்து - வானைச்
சென்றடைகிறதோ !
இயற்கையின் எழிலும்
வண்ணம் பல சுமந்த
இந்த உயிரோவியத்தினூடே
மனிதனின் செயற்கை
வீடும் - வாகனமும்
வளைந்து நெளிந்த
குறுகிய சாலையும்
அழகாக உருமாறி தான்
தெரிகிறது !
பூவுடன் சேர்ந்த
நாரும் கூட
மணம் பெறுவது போல !
நல்லதோர் வாய்ப்பினை வழங்கிய சகோதரர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !
அருமையான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே.
Delete