தித்திக்கும் நீர் பொங்க
குதித்தாட்டம் போட்ட ஆறும்
வற்றித் தான் போனது !
தொங்கித் தாவிய
ஆற்றங்கரை மரமும்
வெட்டுண்டு தான் போனது !
வசிப்பிடம் பறிபோக
வாழ்வாதாரம் தேடி
ஊரினுள் படையெடுத்தேன் -
மானுடரின் பழக்கமெலாம்
சிரமமின்றி கற்றுக் கொண்டேன் !
சமயங்களில் உணவெலாம்
எளிதாக கையில் கிட்ட
எம் குணமனைத்தும்
மறந்தே போனேன்!
அருவி கண்டு பழகிய
எனக்கு - இக்குழாயும்
அருவியெனவே தோன்றவே
கொட்டும் அருவியில்
நீரெடுக்க ஏனிந்த வனிதையருள்
இத்தனை போராட்டமென்றே
எண்ணினேன் !
அருவிக்கு சிறியதாய் வாயிருக்க
அசந்து போய் நின்றிருந்தேன் !
காட்டருவியில் நீரை நிறுத்த
எவருமில்லை ! - இங்கு இந்த
அருவியை குழாயினுள்
அடைத்தவரும் யாரோ ?
கொட்டும் அருவியை
பட்டென்று இறுக்கிப்
பிடித்தவரும் யாரோ ?
மனதினுள் பதிலறியா
கேள்விகள் தலைதூக்க
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் -
ஒரு பெண்மணி
சொல்லிச் செல்கிறார் -
"அதற்குள் நிறுத்தி விட்டார்களே !
அதற்குள்ளாகவா மூன்று மணி
நேரமாகி விட்டது ?"
அந்தோ !
இப்போதல்லவா புரிகிறது -
இந்த அருவியில் வாரமொருமுறை
அதுவும் மூன்று மணி நேரமே
நீர்வரத்து என்று !
இங்கு 15 நாட்களுக்குப் பின் இரண்டு மணி நேரம் தான்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள சகோதரி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன்.
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (14.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE