ஐயிரு திங்கள்
கர்ப்பத்தில் சுமந்து
காலமெல்லாம் நம்மை
தன் நெஞ்சினில் சுமந்து
நமக்காய் தன் சுகம் மறந்து
தனது வாழ்வையே
நமக்காக வாழ்ந்து
தன் சின்னஞ்சிறு
ஆசைகளைக் கூட
நமக்காய் அர்ப்பணித்து
கனவிலும் நினைவிலும்
தன் பிள்ளைகள் பற்றிய
சிந்தனைகளே வியாபித்திருக்க
தான் ஈன்ற பிள்ளைச் செல்வங்களின்
நல்வாழ்வன்றி வேறேதும்
வேண்டுதற்கறியேன் பராபரமே !!
இங்கனம் வேண்டும் தாய்
தியாகச் சுடரன்றோ ???
அவளது அன்பிலும் ஆசியிலும்
கிடைத்திடாதோ நல்வாழ்வு ??
பெருமை நிறை வரிகள்.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி கவியே !!!
ReplyDelete