ஒரு காலத்தில்
நெஞ்சோடணைத்த தழுவல்களையும்
மெல்லிதழ் முத்தங்களையும்
சுமந்து கொண்டிருந்த கைபேசி - இன்று
கோபங்களையும் கடுகடுப்பையும்
சமயங்களில் சற்றே அதிகமான
படபடப்பையும் சுமந்து கொண்டிருக்கிறது !
கடல் மணலில் கால் புதைத்து
அலையினூடாக இருவரும் ஒருவராய்
இறுகக் கைப்பற்றி இனிமையாய்
பொழுதை கழிக்க வந்தவிடத்தில்
காளை அவனை கையடக்க கைபேசி
புது உலகில் இட்டுச் செல்ல
மங்கை அவளோ - உள்ளக் கனவுகளுக்கு
உருக்கொடுத்து - தங்களுக்கே தங்களுக்கென
புது மணல் மாளிகையே எழுப்பி விட்டாள் !
நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து
மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு
மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை
காதல் கோட்டையாய் காட்சி தருமா ? - அல்லது
கவனக் குறைவாய் கைபட்டு - எழிலாய் எழுந்திருக்கும்
ஆசைக் கோட்டையும் சரிந்து விட - அதை
அறியக்கூட முடியாத அளவுக்கு
பணிகளும் சுமைகளும் அவனையே
ஆக்கிரமித்து விடுமா ?
http://www.vallamai.com/?p=57145
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
படத்திற்கேற்ப சிந்தனை வரிகள் அருமை...
ReplyDeleteசிந்திக்க வைக்கும் மிகவும் அருமையான அற்புதமான ஆக்கம். வல்லமை வெளியீட்டுக்கும் சேர்த்து பாராட்டுகள் + வாழ்த்துகள்.
ReplyDelete