Sunday, August 28, 2011

இயற்கை

இறைவனின் திறமையில் உருவான
கற்பனை  ஓவியம் ........ உலகம்....
இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை 
தனது உலக ஓவியத்தில் 
தீட்டி வைத்துள்ளான்..........
நீரோடையென........கடலென ......
மலையென...... நிலமென ........
நீரென.....காற்றென.....
அந்த வண்ண ஓவியத்தில்
நாமும் நடமாடும்
கதாபாத்திரங்கள்......
நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை
பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???
காத்திடுவோம் - இறைவன்
நமக்களித்த இயற்கையை.......
நம் பொக்கிஷமென......
விட்டுச் செல்வோம் - நம்
சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்........


http://www.vallamai.com/?p=30491

 

தாய்


உயிர் கொடுத்து 
உருக் கொடுத்து 
தன்னை மறந்து 
நம்மை மட்டுமே 
நினைந்து.......
உணவு உறக்கம் 
அனைத்தும் 
நமக்காக தியாகம் செய்து 
நம் வாழ்வே .....தன் வாழ்வாக்கி.....
நம்  சித்தமே..... தன் எண்ணமென மாற்றி 
நாம் பிறந்த நொடி முதல் 
தன் மூச்சு உள்ள வரை 
நமக்காக வேண்டும் தெய்வம்-

நிலா

மாசற்ற வெண்மையை 
உன்னகத்தே கொண்டதனால் 
வெண்ணிலா ஆனாய்...
நீ வளர்ந்து தேய்வதனால் 
வளர் மதி ஆனாய்....
மேகத் திரை விலக்கி 
எட்டிப்   பார்க்கும் வேளையில்    
பொன்மதியாய்.....                                                
இரவினில் வான் பார்த்து 
நான் நடக்க - என் 
துணையாக நீயும் 
வந்தாய்....என்
வழியெங்கும்-என் தோழியாய்!!!
http://eluthu.com/kavithai/38390.html 

மலர்கள்

இறைவன் வரைந்த 
இயற்கை ஓவியத்தில் 
பதிக்கப்பட்ட 
நவரத்தினக் கற்கள்.....
வண்ணமயமாய் உலகை 
அலங்கரிக்கின்றன!!!

Wednesday, August 24, 2011

நீர்வீழ்ச்சி

வான மகள் மேகக் கூந்தலை 
அவிழ்த்துப் போட்டிருக்கிறாள் போலும்...
அது வெண்மையாய் பால் போல 
நீர்வீழ்ச்சி என கொட்டுகிறது.....

வாழ்க்கை அகராதி


பிரிவு என்ற வார்த்தையும்
அழிவு என்ற வார்த்தையும்
இல்லாத ஒரு
நட்பு அகராதியை உருவாக்க
நாமும் எண்ணுகிறோம் நண்பர்களே....
ஆனால்....
காலம் என்னும் பேரகரதியினுள்
நம் வாழ்க்கை என்ற வார்த்தைக்கு
உறவு - பிரிவு என்பவையே
அர்த்தங்களாக உள்ளன.......
http://eluthu.com/kavithai/36675.html 

மெழுகுவத்தி



மெழுகை உடலாக்கி
திரியை உயிராக்கி
உலகிற்கு ஒளி கொடுக்க
உன்னையே அழித்துக் கொள்கிறாய்.....
யாரை எண்ணி
நீ இப்படி உருகி
உருக்குலைந்து போகிறாய்??
http://eluthu.com/kavithai/36674.html 
Related Posts Plugin for WordPress, Blogger...